விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 11
Appearance
- 1689 – மூன்றாம் வில்லியம், இரண்டாம் மேரி ஆகியோர் பெரிய பிரித்தானியாவின் முடிக்குரியவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
- 1713 – எசுப்பானிய மரபுரிமைப் போரில் ஈடுபட்ட பெரும்பாலான ஐரோப்பிய அரசுகளுக்கிடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
- 1955 – ஆங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காசுமிர் பிரின்செசு என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர், மூவர் உயிர் தப்பினர். இவ்விமானத்தில் பயணம் செய்யவிருந்த சீனப் பிரதமர் சோ என்லாய் கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்துச் செய்தார்.
- 1957 – பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒப்புதல் அளித்தது.
- 1979 – தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவைக் கைப்பற்றின. உகாண்டா அரசுத்தலைவர் இடி அமீன் (படம்) நாட்டை விட்டு வெளியேறினார்.
- 2007 – அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்ஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 33 பேர் கொல்லப்பட்டு 222 பேர் காயமுற்றனர்.
கி. வா. ஜகந்நாதன் (பி. 1906) · ரெங்கநாதன் சீனிவாசன் (பி. 1910) · அய்க்கண் (இ. 2020)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 10 – ஏப்பிரல் 12 – ஏப்பிரல் 13