விக்கிபீடியாவின் அறிவியல் தகவல்கள்
விக்கிபீடியாவின் அறிவியல் தகவல்கள் (Science information on Wikipedia) அறிவியலைப் பற்றி விக்கிபீடியா முன்வைக்கும் தகவல்களை உள்ளடக்கியதாகும். இந்த தகவல்களின் தாக்கம் மற்றும் தரம் தொடர்பான விமர்சனங்களும் விவாதங்களும் இல்லாமலில்லை. விக்கிபீடியா பயனர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தகவலுடன் பொது ஈடுபாடு கொண்டுள்ள பயனாளிகள் ஆகியோருக்கிடையே இடைவினை உரையாடல்கள் நிகழ்கின்றன.
தாக்கம்
[தொகு]கட்டற்ற சுதந்திரம் கொண்ட அறிவியல் வெளியீடுகளின் விநியோகம் மற்றும் தாக்கத்தை விக்கிப்பீடியா அதிகரித்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கண்டறிந்துள்ளது.[1] மிகவும் பிரபலமான ஒரு பொது தகவல் ஆதாரமாக மாறி வளர்ந்திருக்கும் விக்கிபீடியாவின் புகழ், அறிவியலைப் பற்றி பேசுபவர்கள் மற்றும் எழுதுபவர்களை பாதித்துள்ளது என்பதற்கான சான்றுகள் 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கண்டறிந்துள்ளது.[2][3] தேடுபொறிகளில் தேடப்படும் தரநிலையில் விக்கிப்பீடியா உயர் தரத்தில் இருப்பதால் 2017 ஆம் ஆண்டு விக்கிபீடியாவை அறிவியல் தகவல்களின் பிரபலமான ஆதாரமாக யுனெசுகோ தெரிவித்துள்ளது. .[4] விக்கிப்பீடியா புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை எவ்விதமாக ஒருங்கிணைக்கிறது என்பதை அறிய 2018 ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.[5]
பங்களிப்பாளர்கள்
[தொகு]2016 ஆம் ஆண்டு விக்கி கல்வி அறக்கட்டளையும் சைமன் அறக்கட்டளையும் இணைந்து "அறிவியல் ஆண்டு" என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தை வழங்கின. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக விக்கிபீடியா கல்வியாளர்கள் கல்வி மாநாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். விஞ்ஞானிகளை அவர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ள துறையிலிருந்து படைப்புகளை விக்கிபீடியாவிற்கு பங்களிக்க முன்வருமாறு அழைத்தனர்.[6] கற்றல் அனுபவத்தின் ஒரு பகுதியாக விக்கிபீடியாவின் அறிவியல் கட்டுரைகளைத் திருத்த மாணவர்களை ஊக்குவிக்கும் திட்டங்களை சில பல்கலைக்கழகங்கள் முன்னெடுத்தன.[7] விக்கிபீடியா கட்டுரைகளைத் திருத்த முன்வருமாறு கல்வியாளர்களையும் விக்கிபீடியா சமூகம் அழைக்கிறது. இந்த அழைப்பை ஏற்று பல்வேறு கல்விச் சங்கங்கள் விக்கிபீடியா கட்டுரைகளைத் திருத்த தங்கள் உறுப்பினர்களை ஊக்குவித்துள்ளன.[8] [9]
தரம்
[தொகு]விக்கிபீடியா அனைத்து துறைகளின் அறிவியல் வெளியீடுகளையும் மேற்கோள் காட்டும் ஒரு பரந்த மற்றும் மாறுபட்ட நடைமுறையைக் கொண்டுள்ளது.[10] நேச்சர் இதழில் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, அறிவியல் தலைப்புகள் குறித்த 40 விக்கிபீடியா கட்டுரைகளை அவற்றின் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவுடன் ஒப்பிடுகிறது. ஒவ்வொரு கலைக்களஞ்சியத்திலும் நான்கு "கடுமையான பிழைகள்" இருக்கின்றன என்று துறை நிபுணர்கள் கண்டறிந்தனர். விக்கிபீடியாவில் 162 குறைவான சிக்கல்களும் பிரிட்டானிக்காவில் 123 சிக்கல்களும் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.[11] 2017 ஆம் ஆண்டு ஒரு பிரபல அறிவியல் எழுத்தாளர் விக்கிபீடியாவின் அறிவியல் கட்டுரைகள் மிகவும் தொழில்நுட்பமானவையாக உள்ளன என்று புகார் கூறினார்.[12] விஞ்ஞானம் தொடர்பான விக்கிபீடியாவின் கட்டுரைகள் விஞ்ஞானம் தொடர்பான அரசியல் முடிவுகளை எந்த அளவிற்கு பாதிக்கின்றன என்று பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.[13][14][15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Teplitskiy, Misha; Lu, Grace; Duede, Eamon (September 2017). "Amplifying the impact of open access: Wikipedia and the diffusion of science". Journal of the Association for Information Science and Technology 68 (9): 2116–2127. doi:10.1002/asi.23687.
- ↑ Thompson, Neil; Hanley, Douglas (19 September 2017). "Science Is Shaped by Wikipedia: Evidence from a Randomized Control Trial". Social Science Research Network (MIT Sloan Research Paper No. 5238–17). https://ssrn.com/abstract=3039505.
- ↑ Zastrow, Mark (26 September 2017). "Wikipedia shapes language in science papers" (in en). Nature (Nature Publishing Group). doi:10.1038/nature.2017.22656. https://www.nature.com/news/wikipedia-shapes-language-in-science-papers-1.22656.
- ↑ Natural Sciences Sector (9 May 2017). "The UNESCO Science Report finds a new public on Wikipedia". UNESCO (in ஆங்கிலம்). United Nations.
- ↑ Benjakob, Omer; Aviram, Rona (17 April 2018). "A Clockwork Wikipedia: From a Broad Perspective to a Case Study". Journal of Biological Rhythms 33 (3): 233–244. doi:10.1177/0748730418768120. பப்மெட்:29665713.
- ↑ Simons Foundation (1 March 2017). "Mind the Gaps: Improving the Science on Wikipedia". Simons Foundation.
- ↑ Neal, Meghan (11 February 2016). "Science Students Are Writing Wikipedia Articles Instead of Term Papers". Motherboard (in அமெரிக்க ஆங்கிலம்).
- ↑ Shafee, Thomas; Mietchen, Daniel; Su, Andrew I. (11 August 2017). "Academics can help shape Wikipedia". Science 357 (6351): 557.2–558. doi:10.1126/science.aao0462. பப்மெட்:28798122. Bibcode: 2017Sci...357..557S. https://zenodo.org/record/841430.
- ↑ Goldstein, Evan B. (27 January 2017). "Three Reasons Why Earth Scientists Should Edit Wikipedia". Eos. American Geophysical Union.
- ↑ Arroyo-Machado, Wenceslao; Torres-Salinas, Daniel; Herrera-Viedma, Enrique; Romero-Frías, Esteban; Lozano, Sergi (10 February 2020). "Science through Wikipedia: A novel representation of open knowledge through co-citation networks". PLOS ONE 15 (2): e0228713. doi:10.1371/journal.pone.0228713. பப்மெட்:32040488.
- ↑ "Study: Wikipedia as accurate as Britannica" (in en). CNET. https://www.cnet.com/news/study-wikipedia-as-accurate-as-britannica/.
- ↑ Byrne, Michael (12 October 2017). "Wikipedia's Science Articles Are Elitist". Motherboard (in அமெரிக்க ஆங்கிலம்).
- ↑ Lucassen, Teun; Dijkstra, Roald; Schraagen, Jan Maarten (2012-08-20). "Readability of Wikipedia" (in en). First Monday 0 (9). doi:10.5210/fm.v0i0.3916. https://research.utwente.nl/en/publications/readability-of-wikipedia(1234552f-7a38-4303-8e5f-933b61092e48).html.
- ↑ Clark, Liat (17 August 2015). "Wikipedia wars are harming politically charged science". Wired.
- ↑ Collins, Nathan (18 August 2015). "The Political Controversy of Wikipedia Science Articles". Pacific Standard (in ஆங்கிலம்).