விகோர்சு தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விகோர்சு தேன்சிட்டு
இந்தியாவின் மகாராட்டிரா மாக்னானில் ஆண் விகோர்சு தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
நெக்டாரினிடே
பேரினம்:
ஏதோபைகா
இனம்:
ஏ. விகோர்சி
இருசொற் பெயரீடு
ஏதோபைகா விகோர்சி
சைக்சு, 1832

விகோர்சு தேன்சிட்டு (Vigors's sunbird)(ஏதோபைகா விகோர்சி) என்பது சகாயத்ரி தேன்சிட்டு அல்லது மேற்கத்திய இளநீல கருஞ்சிவப்பு தேன்சிட்டு என அறியப்படுகிறது.

வகைப்பாட்டியல்[தொகு]

விகோர்சு தேன்சிட்டு இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரி ஆகும். இத்டு நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஏதோபைகா பேரினத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது இளநீல கருஞ்சிவப்பு தேன்சிட்டின் (ஏத்தோபைகா சிபராஜா) துணையினமாகக் கருதப்படுகிறது. ஆனால் இதனுடைய மைய வால் நீளமாக இல்லை. மேலும் இதனுடைய பரவலும் ஒரு குறிப்பிட இடத்திற்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.[2]

விளக்கம்[தொகு]

ஆண்[தொகு]

ஆணின் தொண்டை மற்றும் மார்பகம் கருஞ்சிவப்பு நிறமுடையது. அதே சமயம் இதன் கீழ் பாகங்கள் ஒரே மாதிரியாகச் சாம்பல் நிறத்தில் இருக்கும். இதன் இறக்கைகள் சாம்பல்-பழுப்பு நிறத்தில் மஞ்சள்-ஆலிவ் விளிம்புகள் இல்லாமல் காணப்படும்.[3] இருப்பினும், இதன் கீழ் முதுகு மஞ்சள் நிறத்திலும் வால் பச்சை நிறத்திலும் காணப்படும்.

பெண்[தொகு]

பெண் தேன்சிட்டின் மேல்பகுதி அடர் ஆலிவ் நிறத்திலும், கீழ்ப் பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். முதிர்ச்சியடையாத ஆண் தேன்சிட்டு பெண் தேன்சிட்டு போன்றே காணப்படும். ஆனால் இது மந்தமான கருஞ்சிவப்பு தொண்டை மற்றும் மார்பகத்தைக் கொண்டுள்ளது.

பரவல்[தொகு]

விகோரசு தேன்சிட்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியில் காணப்படுகிறது. ஆனால் நீலகிரியிலும் காணப்படுவதாகப் பதிவுகள் உள்ளன.[2] அயர்லாந்தில் பிறந்த விலங்கியல் நிபுணர் நிக்கோலசு அய்ல்வர்ட் விகோர்சின் நினைவாக கர்னல் வில்லியம் ஹென்றி சைக்சு என்பவரால் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Aethopyga vigorsii". IUCN Red List of Threatened Species 2016: e.T103804493A104300369. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103804493A104300369.en. https://www.iucnredlist.org/species/103804493/104300369. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 Rasmussen PC & JC Anderton (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2. Washington DC and Barcelona: Smithsonian Institution and Lynx Edicions. பக். 550. 
  3. Grimmett, Richard, Inskipp, Carol and Tim (2016). Birds of the Indian Subcontinent. India: Christopher Helm. பக். 456. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8-1933-1509-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விகோர்சு_தேன்சிட்டு&oldid=3476978" இலிருந்து மீள்விக்கப்பட்டது