விகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நன்னூல் வகுத்துக் காட்டும் பகுபத உறுப்புகளில் ஒன்று விகுதி. தொல்காப்பியம் இதனைப் பாலறி கிளவி எனக் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் 11 எழுத்துக்கள் பாலறி கிளவிகளாகக் காட்டப்பட்டுள்ளன.

தொல்காப்பியம் காட்டும் பாலறி கிளவி[தொகு]

ன், ள், ர், ப, மார், கு, டு, று, அ, ஆ, வ – ஆகிய 11 எழுத்துகளும் இரண்டு திணைகளிலும் உள்ள ஐந்து பாலையும் காட்டும் பால் அறி கிளவிகளாம். இதனை,

என்ற நூற்பா உணர்த்துகிறது.

நன்னூல் குறிப்பிடும் விகுதிகள்[தொகு]

வினைச்சொல் விகுதிகள்[தொகு]

நன்னூல் இலக்கணம் வினைச்சொல் விகுதிகளைக் குறிப்பிடுகிறது.[1]

  • விகுதிகளுக்கு உரிய எடுத்துக்காட்டுகள் அடிக்குறிப்பாகத் தரப்பட்டுள்ளன.
படர்க்கை, ஆண்பால் வினைமுற்று விகுதி அன் [2] ஆன் [3]
படர்க்கை, பெண்பால் வினைமுற்று விகுதி அள் [4] ஆள் [5]
படர்க்கை, பலர்பால் வினைமுற்று அர் [6] ஆர் [7] [8] மார் [9]
படர்க்கை, பலவின்பால் வினைமுற்று விகுதி [10] [11]
படர்க்கை, ஒன்றன்பால் கு [12] து [13] து [14] று [15]
தன்மை, ஒருமை என் [16] ஏன் [17] அல் [18] அன் [19]
தன்மை, பன்மை அம் [20] ஆம் [21] எம் [22] ஏம் [23] ஒம் [24] ஓம் [25]
தன்மையும், முன்னிலையும் சேர்ந்த பன்மை கும் [26] டும் [27] தும் [28] றும் [29]
முன்னிலை, ஒருமை [30] ஆய் [31] [32] மின் [33]
முன்னிலை, பன்மை இர் [34] ஈர் [35] ஈயர் [36]
தன்மையும், முன்னிலையும், படர்க்கையும் இயைந்த வியங்கோள் [37] [38]

என்பவும் பிறவும் எனக் குறிப்பிடுகிறது. [39]

காலம் காட்டும் விகுதி [40][தொகு]

று, றும் சென்று (சென்றேன்) சென்றும் (சென்றோம்) இறந்த காலம்
று, றும் சேறு (செல்வேன்) சேறும் (செல்வோம்) எதிர்காலம்
து, தும் வந்து (வந்தேன்) வந்தும் (வந்தோம்) இறந்த காலம்
து, தும் வருது (வருவேன்) வருதும் (வருவோம்) எதிர்காலம்
டு, டும் உண்டு (உண்டேன்) உண்டும் (உண்டோம்) இறந்த காலம்
கு, கும் உண்கு (உன்பேன்) உண்கும் (உண்போம்) எதிர்காலம்
மின், ஈர், உம், ஆய் உண், உண்மின், உண்ணீர், உண்ணும், உன்னாய், (ஏவல்) எதிர்காலம்
க, ய, இயர் உண்க, வாழிய, வாழியர், (வியங்கோள்) எதிர்காலம்
சேறி (செல்வாய்), உண்மார் (உண்பார்) - எதிர்காலம்
உண்ப (உண்டார்), என்ப (என்றார்) - இறந்த காலம்
உம் உண்ணும் - நிகழ்வும், எதிர்வும்
உண்ணா (உண்ணமாட்டா) எதிர்மறை எதிர்காலம்

பெயர்சொல் விகுதிகள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப மார்
    அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்
    அம் ஆம் எம் ஏம் ஓம் ஒடு உம் ஊர்
    க ட த ற ஐ ஆய் இ மின் இர் ஈர்
    ஈயர் கயவும் என்பவும் பிறவும்
    வினையின் விகுதி பெயரினும் சிலவே (நன்னூல் 140)

  2. செய்தனன்
  3. செய்தான்
  4. செய்தனள்
  5. செய்தாள்
  6. செய்தனர்
  7. செய்தார்
  8. செய்ப
  9. செய்ம்மார்
  10. செய்தன
  11. செய்யா
  12. அது செய்கு
  13. அது குண்டு கட்டு
  14. அது செய்து
  15. அது சென்று
  16. செய்தனென்
  17. செய்தேன்
  18. செய்வல்
  19. யான் செய்குவன்
  20. யாம் செய்தனம்
  21. செய்தாம்
  22. செய்தனெம்
  23. செய்தேம்
  24. செய்குவெம்
  25. செய்வோம்
  26. உண்கும் (எதிர்காலம்)
  27. உண்டும் (இறந்த காலம்)
  28. திங்களைப் போற்றுதும் (சிலப்பதிகாரம்)
  29. சென்றும்
  30. நீ சென்றனை
  31. சென்றாய்
  32. படுத்தி
  33. போற்றுமின்
  34. சென்றனிர்
  35. சென்றீர்
  36. சென்றீயர்
  37. வாழ்க
  38. வாழிய
  39. நன்னூல் 140
  40. நன்னூல் காண்டிகை உரை 145
"https://ta.wikipedia.org/w/index.php?title=விகுதி&oldid=3193678" இலிருந்து மீள்விக்கப்பட்டது