உள்ளடக்கத்துக்குச் செல்

விகார் மன்சில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விகார் மன்சில்
Vikhar Manzil
பொதுவான தகவல்கள்
வகைஅரண்மனை
கட்டிடக்கலை பாணிஇந்தோ-ஐரோப்பியக் கலை
இடம்ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா
நிறைவுற்றது1900

விகார் மன்சில் (Vikhar Manzil) தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமான ஐதராபாத்தில் உள்ள அரண்மனையாகும். நெக்லசு சாலையில் சஞ்சீவய்யா பூங்காவை நோக்கி செல்லும் வழியில் இரயில் பாதையின் இடதுபுறத்தில் விகார் மன்சில் உள்ளது. இது பைகா பிரபு குடும்பமும் ஐதராபாத்து இராச்சியத்தின் ஆறாவது நிசாமின் முதல் பிரதம மந்திரியுமான சர் விகார்-உல்-உம்ராவின் மாளிகையாகும்.[1] ஊசைன் சாகர் ஏரியின் அழகான காட்சியினால் இவர் ஈர்க்கப்பட்டார். 1900 ஆம் ஆண்டில் இந்தோ-ஐரோப்பிய கட்டிடக்கலை பாணியில் இந்த அரண்மனையை வாங்கினார். முன்னதாக இந்த அரண்மனையில் ஒரு விருந்துக்காக இவர் அழைக்கப்பட்டிருந்தார்.[2]

சர் விகார்-உல்-உம்ரா இந்த மாளிகையில் வசிக்கவில்லை என்றாலும், இவருடைய மகன் நவாப் விலாயத் இயங் வாலி-உத்-தௌலா விகார் மன்சிலில் தங்கியிருந்தார். விகார் மன்சில் அதன் கட்டிடக்கலை அம்சங்களுக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Palace with a view". தி இந்து. 2004-03-24. Archived from the original on 2004-07-05. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.
  2. "Viqar Manzil: Going back into a rich past" (in en-US). Telangana Today. https://telanganatoday.com/viqar-manzil-going-back-into-rich-past. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விகார்_மன்சில்&oldid=4141685" இலிருந்து மீள்விக்கப்பட்டது