வா. சு. சுரேகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வா.சு. சுரேகா
V. S. Surekha
தனிநபர் தகவல்
முழு பெயர்சுரேகா வாழாலிப்பில்லி சுரேசு
தேசியம்இந்தியா
பிறப்பு14 ஆகத்து 1984 (1984-08-14) (அகவை 39)
கேரளம், இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)தடியூன்றித் தாண்டுதல்
சாதனைகளும் விருதுகளும்
மண்டல இறுதிஇந்தியன்: 2003, 2004, 2006
தனிப்பட்ட சாதனை(கள்)4.15 மீ (புது தில்லி 2014) தடகள விளையாட்டுக்களில் இந்திய சாதனைகளின் பட்டியல்
5 நவம்பர் 2014 இற்றைப்படுத்தியது.

வா.சு. சுரேகா (V. S. Surekha) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தடியூன்றித் தாண்டும் தடகள வீராங்கனையாவார். 2014 ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற தேசிய திறந்தநிலை வெற்றியாளர் போட்டியில் 4.15 மீ உயரம் தாண்டி தேசிய சாதனையை இவர் படைத்துள்ளார்.[1] 4.00 மீட்டர் உயரத்தை கடந்த முதல் இந்திய பெண் வீராங்கனை சுரேகா ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சுரேகா இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் பிறந்தார். சிறுவயதில் நீளம் தாண்டுதல் வீராங்கனையாக இருந்தபோதே இவருக்கு விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, சென்னையில் உள்ள பிரைம் விளையாட்டு அகாடமியின் பயிற்சியாளர் நாகராஜின் கீழ் தடியூன்றித் தாண்டும் பயிற்சியைத் தொடங்கினார். முன்னாள் தடியூன்றித் தாண்டும் தடகள வீரர் மாணிக் ராசுவின் தொழில்நுட்ப உதவியுடன் இவர் தேசிய அளவு போட்டிகளுக்கு பயிற்சி பெற முடிந்தது.[2]

தொழில்[தொகு]

2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 அன்று பெங்களூரில் நடந்த 43 ஆவது திறந்தநிலை தடகள வெற்றியாளர் போட்டியில் 3.51 மீ உயரம் என்ற தேசிய சாதனையை இவர் படைத்தார்.[3] 2014 ஆம் ஆண்டு நவம்பரில் தில்லியில் நடந்த தேசிய திறந்தநிலை வெற்றியாளர் போட்டியில் 4.15 மீட்டர் உயரம் கடந்து சாதனை படைத்தார் [1] .

2006 ஆம் ஆண்டு தோகா ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், 2009 நவம்பரில் நடந்த குவாங்சௌ ஆசிய வெற்றியாளர் போடியிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். விளையாட்டு வீரரின் செயல்திறனின் சுருக்கம் அட்டவணை 1 இல் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டவணை 1
ஆண்டு செயல்திறன் இடம் கருத்துக்கள்
2003 3.51 மீ 28 செப்டம்பர் 2003 அன்று பெங்களூரில் 43 ஆவது திறந்தநிலை தேசிய தடகள வெற்றியாளர் போட்டி.[3] தேசிய சாதனை
2006 3.85 மீ புது தில்லி தேசிய வெற்றியாளர் போட்டி [4]
2006 4.08 மீ 3 ஆவது தேசிய தடகள சுற்று போட்டி, பாட்டியாலா [5] 4 மீட்டரை கடந்தது.
2014 4.15 மீ நவம்பர் 4, 2014 அன்று புது தில்லியில் நடைபெற்ற திறந்தநிலை தேசிய தடகள வெற்றியாளர் போட்டி எட்டு ஆண்டுகால தனது சாதனையை மேம்படுத்தி புதிய தேசிய சாதனையை படைத்தார் [6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அவர் மூன்று தாண்டுதல் வீரரும் இந்திய தேசிய சாதனையாளருமான ரஞ்சித் மகேசுவாரியை [7] திருமணம் செய்து கொண்டார், மேலும் ஜியா மற்றும் இசுபர்சா என்ற இரண்டு மகள்களின் தாயாவார்.[8] 2014 ஆம் ஆண்டில் நான்கு வயது மகளுக்கு தாயாக இருந்தபோதும் 4.15 மீ உயரம்தாண்டி தேசிய சாதனை படைத்தார் [9]

இவர் தெற்கு இரயில்வேயின் ஊழியராகப் [10] பணிபுரிகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Surekha soars past own National mark". The Hindu. 5 November 2014. http://www.thehindu.com/sport/other-sports/national-athletics-championships-surekha-soars-past-own-national-mark/article6564586.ece. 
  2. "Surekha and Renjith's jump to success". The Bridge. 28 October 2017. பார்க்கப்பட்ட நாள் 25 August 2017.
  3. 3.0 3.1 "Piyush Kumar and Surekha adjudged best". Sportstar (The Hindu). 2–8 October 2004. "Piyush Kumar and Surekha adjudged best". Sportstar (The Hindu). 2–8 October 2004.
  4. "IAAF: Vazhalipilli Sureshbabu SUREKA | Profile". iaaf.org. பார்க்கப்பட்ட நாள் 25 August 2018.
  5. "VAZHALIPILLI SURESHBABU SUREKA". "VAZHALIPILLI SURESHBABU SUREKA". IAAF official website. Retrieved 25 August 2018.
  6. "Pole vaulter Surekha shatters her own national record - Times of India". 
  7. "Couple rewrite meet records". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 24 October 2009. http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Couple+rewrite+meet+records&artid=xXhBVNueyq0=&SectionID=Aw%7Cqo8JJkxA=&MainSectionID=b7ziAYMenjw=&SectionName=%7C%7CWM0BI9WGM=&SEO=K%20Sowjanya,%20VS%20Surekha,%20Renjith%20Maheswary,%20S%20Srees#. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Surekha and Renjith's jump to success". The Bridge. 28 October 2017. https://thebridge.in/surekha-renjith-jump/. 
  9. "Sports couples: when love blooms on the field...". Malayala Manorama. 8 March 2018. https://english.manoramaonline.com/sports/other-sports/2018/03/08/sports-couples-kevin-nayana-james-neena-pinto-surekha-renjith.html. 
  10. Mohan, K P (18 May 2005). "Surekha scales a new peak". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 25 August 2018.[தொடர்பிழந்த இணைப்பு]

புற இணைப்புகள்[தொகு]

  • V. S. Surekha at World Athletics
"https://ta.wikipedia.org/w/index.php?title=வா._சு._சுரேகா&oldid=3760887" இலிருந்து மீள்விக்கப்பட்டது