வாஸ்வான்
![]() | |
பகுதி | காஷ்மீர் |
---|

Wazwan ( Wazwan ) என்பது காஷ்மீரி உணவு வகைகளில் ஒன்றாகும். இது காஷ்மீர் பகுதியிலிருந்து உருவான அசைவ உணவாகும். ஏறக்குறைய அனைத்து உணவுகளும் சில சைவ உணவுகளுடன் ஆட்டிறைச்சி அல்லது கோழியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இது காஷ்மீர் பகுதி முழுவதும் பிரபலமானது. மேலும், காஷ்மீரி உணவு திருவிழாக்களிலும், சர்வதேச அளவிலான கூட்டங்களிலும் பரிமாறப்படுகிறது. [1]
வரலாறு
[தொகு]
காஷ்மீரி மொழியில், "வாஸ்" என்றால் 'சமையல்' என்றும் "வான்" என்பது 'கடை' எனவும் பொருளாகும். காஷ்மீரில் முறையான அரச விருந்துகளில், பதினைந்துக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட இறைச்சித் தயாரிப்புகளாக இருக்கும். அவை ஒரு தலைமை சமையல்காரரனின் மேற்பார்வையின் கீழ் ஒரே இரவில் சமைக்கப்படும். விருந்தினர்கள் நான்கு பேர் கொண்ட குழுக்களாக அமர்ந்து, டிரீம் எனப்படும் ஒரு பெரிய செப்புத் தட்டிலிருந்து உணவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தஷ்-டி-நியர் என்று அழைக்கப்படும் ஒரு கையடக்கப் பாஅத்திரத்தில் கைகளைக் கழுவும் சடங்கு உதவியாளர்களால் நிகழ்த்தப்படுகிறது. தயிர் மற்றும் சட்னி தனித்தனியாக சிறிய மண் பானைகளில் பரிமாறப்படுகிறது. [2] [3] [4] அதன் பிறகு, இனிப்புகள் வழங்கப்படுகின்றன. குளிர்காலத்தில், இனிப்பு சூடான உணவாகவும், கோடையில் பொதுவாக குளிர்ச்சியாகவும் இருக்கும்.
- பலவகையான வாஸ்வான்
-
Tabak maaz
-
இரிஷ்தா
-
கபாப்
-
தயேனி போல்
-
குஷ்தபா
-
வாஸ்வான் தயாரிக்கப்படுகிறது
குறிப்புகள்
[தொகு]- ↑ "Wazwan Information". Archived from the original on 2014-12-26. Retrieved 2023-02-11.
- ↑ "Wazwan Menu". The Manor Delhi. Archived from the original on 30 டிசம்பர் 2017. Retrieved 20 October 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Wonders of the Wazwan". The Hindu. 11 April 2012. Retrieved 20 October 2016.
- ↑ Gupta, Namita (2 June 2016). "Wazwan from the valley". Deccan Chronicle. Retrieved 20 October 2016.