வாவூல் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாவூல் மலை
வாவூல் மலை is located in கேரளம்
வாவூல் மலை
வாவூல் மலை
வாவூல் மலைச் சிகர அமைவிடம், கேரளா
உயர்ந்த இடம்
உயரம்2,339 m (7,674 ft) [1]
இடவியல் முக்கியத்துவம்1,479 m (4,852 ft) [1]
ஆள்கூறு11°25′41″N 76°07′52″E / 11.428°N 76.131°E / 11.428; 76.131ஆள்கூறுகள்: 11°25′41″N 76°07′52″E / 11.428°N 76.131°E / 11.428; 76.131[2]
புவியியல்
அமைவிடம்தாமரைச்சேரி எல்லை, கோழிக்கோடு மாவட்டம் மற்றும் நிலாம்பூர் வட்டம், மலப்புரம் மாவட்டம், கேரளா, இந்தியா
மலைத்தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை
Climbing
Easiest routehike

வாவூல் மலை (Vavul Mala) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில்கேரளப்பகுதியில் வெள்ளரிமலை வரம்பில் உள்ள சிகரமாகும். இது கேரளாவின் மலப்புரம் மாவட்டம் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது. வாவூல் மலை "ஒட்டக சிமிழை” ஒத்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,339 மீ உயரத்தில் அமைந்துள்ளது.[3] இது நீலகிரிக்கு அப்பால் மேற்குத் தொடர்ச்சி மலையில் மிக உயரமான சிகரமாகவும், கோழிக்கோடு மாவட்டத்தின் மிக உயரமான இடமாகவும் உள்ளது. இந்தப் பகுதியில் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் நீலகிரி மலைகளில் காணப்படுவதை ஒத்ததாக உள்ளன.

வில்லியம் லோகன் என்பார் 1887ல் வெளியிட்ட மலபார் கையேட்டின் முதல் தொகுதி (பின்னர் 1908 ஆம் ஆண்டின் மலபார் வர்த்தமானியால் தொடரப்பட்டது) 7,677 அடி உயரமுள்ள வாவூல் மலை அரேபியக் கடலுக்கு வெகு தொலைவில் உள்ள ஒரு அடையாளமாகக் குறிப்பிடப்படுகிறது. [4]

வெள்ளரிமலைப் பகுதி மலப்புரம் ஓரமாக, கோழிக்கோடு மற்றும் வயநாட்டின் எல்லைக்கு இடையில் அமைந்துள்ளது. இது "ஒட்டக சிமிழ் மலைகள்" என்று அழைக்கப்படும் உயர் நிலப்பரப்பு. இது நீலகிரி மலைகளிலிருந்து தக்காணப் பீடபூமி மற்றும் சாலியார் நதி பள்ளத்தாக்கு ஆகியவற்றால் பிரிக்கப்பட்டுள்ளது. இது தென்னிந்தியாவில் மிகவும் கடினமான மலையேற்ற இடமாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Southern India Mountain Ultra-Prominence". Peaklist.org. பார்த்த நாள் 2017-08-29.
  2. "Vavul Mala, India". Peakbagger.com. பார்த்த நாள் 2017-08-29.
  3. "Malappuram District - Panchayath Statistics 2011". மூல முகவரியிலிருந்து 2017-11-18 அன்று பரணிடப்பட்டது.
  4. Malabar Manual - Volume I
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாவூல்_மலை&oldid=3228368" இருந்து மீள்விக்கப்பட்டது