வாவி பாளையம் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாவி பாளையம்
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் பல்லடம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். எஸ். வினீத், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி கோயம்புத்தூர்
மக்களவை உறுப்பினர்

பி. ஆர். நடராஜன்

சட்டமன்றத் தொகுதி பல்லடம்
சட்டமன்ற உறுப்பினர்

எம். எஸ். எம். ஆனந்தன் (அதிமுக)

மக்கள் தொகை 2,315
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


வாவி பாளையம் ஊராட்சி என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இது பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கும், கோவை நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டது.

மக்கள் தொகை[தொகு]

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இந்த ஊராட்சியில் 1,993 பேர் வசிக்கின்றனர். இதில் 57% ஆண்களும் 43% பெண்களும் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் 4 பேர் மன்ற தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

போக்குவரத்து[தொகு]

இந்த ஊரில் போக்குவரத்து வசதியாக பல்லடம் - உடுமலைப்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் செஞ்சேரிமலை - காங்கேயம் சாலையில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். இங்கிருந்து காங்கயம், திருப்பூர், பல்லடம், கேத்தனூர், உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், ஜல்லிபட்டி,சேலம், ஈரோடு, நெகமம், பொள்ளாச்சி, செஞ்சேரிமலை, காட்டம்பட்டி,ஊட்டி,அன்னூர்,பெருந்துறை என முக்கிய இடங்களுக்கு நேரடி போக்குவரத்து வசதி உள்ளது.

வரலாறு[தொகு]

வாவி பாளையத்தின் வரலாறு என்பது சுவாரஸ்யமான தகவல்களை கொண்டது.வாவி என்பது வரலாற்று ஆதரப்படி தமிழில் குளம் என்று பொருள்படும். இது இந்தப் பகுதியில் குளம் இருந்தற்கான அடையாளத்தை காண முடிகிறது. பின் பாளையம் என்பது நாயக்கர் ஆட்சிகள் வம்சாவளியாக தொடந்து நடைபெற்றுக் கொண்டு இருந்திருக்கிறது. நாயக்கர் ஒருவர் இந்த பகுதியில் விவசாயத்திற்காகவும் மக்கள் தங்கள் தண்ணீரை பருகவும் ஓர் பெரும் குளம் வெட்டப்பட்டு இருந்தால் குளம் (வாவி) + நாயக்கர் (பாளையம்) = வாவி பாளையம் என பெயர் பெற்றது. பொதுவாக நாயக்கர்கள் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகள் பெரும்பாலும் பாளையம் என்றே அழைப்பர்.

சிற்றூர்கள்[தொகு]

  • வாவி பாளையம்
  • முத்தூர்
  • கழுவேரி பாளையம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாவி_பாளையம்_ஊராட்சி&oldid=3064736" இருந்து மீள்விக்கப்பட்டது