வாழ்த்தியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழ்த்தியல் என்னும் துறையைச் சேர்ந்த பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் 12 உள்ளன. இந்தத் துறை புறநானூற்றில் பாடாண் திணையில் வருகிறது.

  1. இமயம், பொதியில் மலைகள் போல் வாழ்க. [1]
  2. மனைவியோடு மகிழ்ந்து வாழ்க. [2]
  3. குளுமை தரும் மதியம் பொலவும், ஒளி தரும் ஞாயிறு போலவும் வாழ்க. [3]
  4. மதம் பிடித்த யானைமீதிருப்பவன் நோயிலனாகத் திரும்புக. [4]
  5. சிவபெருமான் போல நிலைபெறுக. [5]
  6. பகைவனிடம் மேம்படுவாயாக. [6]
  7. மேகம் பொழியும் மழைத்துளிகளைக் காட்டிலும் பல்லாண்டுகள் வாழ்க. [7]
  8. நிலம் உள்ளவரை வாழ்க. [8]
  9. கடல் போன்ற படையுடன் வாழ்க. [9]
  10. மழைமேகம் போல் வாழ்க. [10]
  11. வேண்டியது நல்கும் தாள் வாழ்க. [11]
  12. பொருநை ஆற்று மணலினும் பல்லாண்டு வாழ்க. [12]

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறநானூறு 2.
  2. புறநானூறு 3,
  3. புறநானூறு 6,
  4. புறநானூறு 13,
  5. புறநானூறு 91,
  6. புறநானூறு 158,
  7. புறநானூறு 367,
  8. புறநானூறு 375,
  9. புறநானூறு 377,
  10. புறநானூறு 385,
  11. புறநானூறு 386,
  12. புறநானூறு 387
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்த்தியல்&oldid=3511250" இலிருந்து மீள்விக்கப்பட்டது