வாழைப்பழ தூள்
வாழைப்பழ தூள் (Banana powder) என்பது பதப்படுத்தப்பட்ட வாழைப்பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான தூள் ஆகும். இது பால் குலுக்கல் மற்றும் குழந்தை உணவுகளில் ஒரு பகுதியாக உள்ளது.[1][2] வாழைப்பழ தூள் பல்வேறு வகையான அணிச்சல் மற்றும் மாச்சில்லு தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.[3]
உற்பத்தி
[தொகு]வாழைப்பழக் கூழ் பயன்படுத்துவதன் மூலம் வாழைப்பழத் தூள் தயாரிக்கப்படுகிறது. இயந்திரத்தின் உதவியினால் நறுக்கப்பட்டு வாழைக்காய் கூழ் ஆலை பயன்படுத்திப் பதப்படுத்தப்பட்டு பசையாக மாற்றப்படுகிறது. பின்னர் இதனுடன் சோடியம் மெட்டாபைசல்பைட் சேர்க்கப்படுகிறது. இதனால் பசையின் மஞ்சள் நிறம் பிரகாசமாகக் காணப்படும். பசையானது தெளிப்பு அல்லது உலையில் உலர்த்தப்படுகிறது. உலர்த்தும் போது பசையில் இழப்பு ஏதும் ஏற்படுவதில்லை. கலனில் உலர்த்துவதன் மூலம் சுமார் 2% அதிக தூளை உற்பத்தி செய்வதுடன் முழுமையாகத் துகள் உலர்த்தப்படுகிறது.[3][4] வாழைப் பொடி பொதுவாக ஒரு வருடத்திற்கு மட்டுமே அதன் தன்மை மாறாமல் இருக்கும்.[5]
வரலாறு
[தொகு]குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு முறையாக 1900களின் முற்பகுதியிலிருந்தே குழந்தை உணவுகளில் வாழைப் பொடியின் பயன்பாடு பரவலாக உள்ளது.[6] 1916ஆம் ஆண்டில் "மேற்கிந்தியத் தீவுகளின் முக்கியமான தொழில்களில்" ஒன்றாக இது கருதப்பட்டது. உலர்ந்த வாழைப்பழங்கள் "அத்திப்பழங்களுடன்" பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது.[7]
ஒருங்கிணைந்த பழ நிறுவனம் 1930களில் மெல்சோ என்ற பெயரில் தயாரிக்கத் தொடங்கியது. இதில் வாழைப் பொடி முக்கிய மூலப்பொருள். வாழைப்பழத்தின் பயனுள்ள பண்புகள் காரணமாக, மெல்சோ "குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்குச் சுகாதார உணவாகவும், சில அசீரணங்களுக்கான மருந்தாகவும், மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ மந்தமான அனைவருக்கும் புத்துயிர் அளிப்பவையாக" விற்பனை செய்யப்பட்டது.[2]
பயன்பாடு
[தொகு]பொதுவான பயன்கள்
[தொகு]வாழைப்பழ தூள் "கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளின் முக்கிய ஆதாரமாக" கண்டறியப்பட்டுள்ளது. இதில் புரதத்தின் அளவு குறைவாக இருந்தாலும், தூளின் நன்மை பயக்கும் பொருட்கள் இன்னும் "மற்ற பழங்களை விடக் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்தவை".[8] இந்த தூள்செறியாமைக்கான (அசீரணம்) பொதுவான சிகிச்சையாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.[9]
அறிவியல் பயன்கள்
[தொகு]1984ஆம் ஆண்டில், இந்தியாவைச் சேர்ந்த அறிவியலார்கள் வாழைப் பொடியில் காணப்படும் "ஆன்டிஅல்சர் சேர்மங்களின்" ஒரு பகுதியைப் பிரித்தெடுத்தனர்.[10] இது வயிற்றில் புண்களைத் தடுப்பதில் "300 மடங்கு அதிக செயலில்" இருந்தது. வாழை தூள் உயிரணு வளர்ச்சியை அதிகரிப்பதாகக் கண்டறிந்தனர். இது முன்னர் புண்கள் ஏற்பட்ட பகுதியை விரைவாகக் குணப்படுத்தவும் செய்கின்றன.[11]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Hindu Business Line : BARC develops tech to make biscuits, baby food from banana". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 25 November 2010.
- ↑ 2.0 2.1 Scofield Wilson, David (1999). Rooted in America: foodlore of popular fruits and vegetables. Univ. of Tennessee Press. pp. 28–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781572330535.
banana powder
- ↑ 3.0 3.1 H. Hui, Yiu; Stephanie Clark (2007). Handbook of Food Products Manufacturing: Principles, Bakery, Beverages, Cereals, Cheese, Confectionary, Fats, Fruits, and Functional Foods. Wiley-Interscience. p. 873. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470049648.
- ↑ Food and Agriculture Organization of the United Nations (1989). Utilization of Tropical Foods: Trees. Food & Agriculture Org. pp. 33–34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789251027769.
- ↑ Association of Food Technologists (2007). "Packaging and storage studies on spray dried ripe banana powder under ambient conditions". Journal of Food Science 44: 16–19. https://books.google.com/books?id=-_9IAAAAYAAJ&q=%22banana+powder%22.
- ↑ Pamphlets on Biology: Kofoid collection, Volume 147. 1900. pp. 12–15.
- ↑ United States. Bureau of Manufactures (1916). Commerce reports, Volume 4. Bureau of Foreign and Domestic Commerce, United States Dept. of Commerce. p. 290.
- ↑ Sri Avinashilingam Home Science College (1976). The Indian journal of nutrition and dietetics, Volume 13. Sri Avinashilingam Home Science College for Women. pp. 218–224.
- ↑ Al-Achi, Antoine (2008). An introduction to botanical medicines: history, science, uses, and dangers. ABC-CLIO. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313350092.
- ↑ Information, Reed Business (6 September 1984). "Rats with ulcers go bananas". New Scientist: 22. https://books.google.com/books?id=MUC8uPq-Wd8C&q=%22banana+powder%22&pg=PA22.
- ↑ R.K. Goela; Saroj Guptab; R. Shankarc; A.K. Sanyal (1986). "Anti-ulcerogenic effect of banana powder (Musa sapientum var. paradisiaca) and its effect on mucosal resistance". Journal of Ethnopharmacology 18 (1): 33–44. doi:10.1016/0378-8741(86)90041-3. பப்மெட்:3821133. https://archive.org/details/sim_journal-of-ethnopharmacology_1986-10_18_1/page/33.[தொடர்பிழந்த இணைப்பு]
மேலும் படிக்க
[தொகு]- Wang, Juan; Li, Yuan Zhi; Chen, Ren Ren; Bao, Jin Yong; Yang, Gong Ming (January 2007). "Comparison of volatiles of banana powder dehydrated by vacuum belt drying, freeze-drying and air-drying". Food Chemistry 104 (4): 1516. doi:10.1016/j.foodchem.2007.02.029.
- von Meysenbug, L.; Fine, Archie (May 1936). "Banana powder and the fecal flora of infants". The Journal of Pediatrics 8 (5): 630. doi:10.1016/S0022-3476(36)80163-2. https://archive.org/details/sim_journal-of-pediatrics_1936-05_8_5/page/630.