வால் படகோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கத்திய கருந் திமிங்கலத்தின் படகோட்டம்

வால் படகோட்டம் (Tail sailing) என்பது திமிங்கிலங்கள் நீண்ட நேரத்திற்கு அவற்றின் வாலை தண்ணீருக்கு மேலாக தூக்கி பயணிப்பதைக் குறிக்கிறது.[1] திமிங்கிலங்களின் இந்த செயல்முறை மனிதர்களால் அரிதாகவே அவதானிக்கப்படுகிறது. திமிங்கிலங்களின் இந்த நிகழ்வுக்கான துல்லியமான உந்துதல் ஏதும் தெரியவில்லை.[2] திமிங்கிலங்கள் காற்றைப் பிடித்துக்கொள்ளவும் நீரின் வழியாக நெடுந்தூரப் பயணம் செய்யவும் அல்லது அவற்றை குளிர்வித்துக் கொள்வதற்கான ஒரு முறையாகவும் இந்த செயலை மேற்கொள்கின்றன என்று கருதப்படுகிறது. திமிங்கிலம் கடல் தளத்திற்கு அருகில் உணவு எடுத்துக் கொள்கிறது என்று மூன்றாவது கோட்பாடு ஒன்று கூறுகிறது.

தெற்கு ஆத்திரேலிய கருந்திமிங்கிலம் போன்ற சில உயிரினங்களிடையே வால் படகோட்டம் மிகவும் பொதுவானது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sailing Tail". Whale Coast Route (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-03-11.
  2. "Rare footage released of humpback whale hanging tail in air near Hawaii". Telegraph.co.uk. Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 2016-03-11.
  3. Staff, AOL. "Humpback whale 'tail-sails' as she watches her calf off the Maui coast". AOL.com. பார்க்கப்பட்ட நாள் 2016-03-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்_படகோட்டம்&oldid=3571248" இலிருந்து மீள்விக்கப்பட்டது