உள்ளடக்கத்துக்குச் செல்

வால்மிக் தாப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்மிக் தாப்பர்
பிறப்பு1952 (1952)
புது தில்லி, இந்தியா
இறப்பு (அகவை 73)
புது தில்லி, இந்தியா
பணிஇயற்கை வரலாற்றுப் பாதுகாவலர், ஆவணப் படம் தயாரிப்பாளர்
அறியப்படுவதுலேண்ட் ஆப் டைகர் (1997) - புலி மனிதன்
தந்தைரோமேசு தாப்பர்
வாழ்க்கைத்
துணை
சஞ்சனா கபூர்
பிள்ளைகள்கமீர் தாப்பர்
உறவினர்கள்ரூமிலா தாப்பர் (அத்தை)
தயா ராம் தாப்பர் (தாத்தா)
பிரன் நாத் தாப்பர் (மாமா)

வால்மிக் தாப்பர் (Valmik Tapar) (1952-31 மே 2025) என்பவர் புலி மனிதர் என்று அறியப்படுகிறார்.[1] இவர் இந்திய இயற்கை ஆர்வலரும், பாதுகாவலரும் எழுத்தாளரும் ஆவார்.[2][3][4] இவர் இயறகைப் பாதுகாப்பு குறித்து 14 புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார்.[5] இந்தியாவின் மிகவும் போற்றத்தக்க வனவிலங்கு வல்லுநர், பாதுகாப்பாளர்களில் ஒருவரான இவர், பிபிசி, அனிமல் பிளானட், டிஸ்கவரி, தேசிய புவியியல் கழகம் போன்ற காட்சி ஊடகங்களுக்கு இந்தியாவின் இயற்கை வாழ்விடம் குறித்த ஆவணப்படங்களைத் தயாரித்துள்ளார்.

இளமை

[தொகு]

தாப்பர், 1959ஆம் ஆண்டில் செமினார் எனும் அரசியல் இதழை நிறுவிய ராஜ் தாப்பர், புகழ்பெற்ற பத்திரிகையாளரும் அரசியல் வர்ணனையாளருமான ரோமேசு தாப்பர் ஆகிய இணையரின் மகனாக மகாராட்டிர தலைநகர் மும்பையில் பிறந்தார். புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் இவரது அத்தை ஆவார். iவர் நாடக ஆளுமை சஞ்சனா கபூரை மணந்தார். இந்த தம்பதியினருக்கு கமீர் என்ற மகன் உள்ளார். இவர்கள் தில்லியில் வசித்து வந்தனர்.[6]

பணி

[தொகு]

வால்மிக் தாப்பர் இந்தியாவின் புலிகளின் குறித்து தனது ஆய்வினைப் பல தசாப்தங்களாக தொடர்ந்தார். இவர் பதேக்சிங் இரத்தோரால் ஈர்க்கப்பட்டார்.[7]

இரணதம்பூர் அறக்கட்டளை இவரது பணியினை அங்கீகரித்து தலைமைப் பொறுப்பை வழங்கியது. இவர் 2005-ஆம் ஆண்டு புலிகள் பணிக்குழுவில் உறுப்பினராக இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். புலிகள்-மனிதர்களின் சகவாழ்வின் வாய்ப்புகளில் அதிகக் கவனம் செலுத்துவதாக தனது கருத்து வேறுபாடு குறிப்பில் பெரும்பான்மை பணிக்குழுவின் பார்வையை இவர் விமர்சித்தார், இது இவரது பார்வையில் குழுவின் நோக்கத்துடன் ஒத்துப்போகவில்லை.

1973-ஆம் ஆண்டில் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டம்தோல்வியடைந்ததாக இவரது பகுப்பாய்வுகள் தெரிவித்தன.[8] பெரும்பாலும் அறிவியல் ரீதியாகப் பயிற்சி பெறாத வன அதிகாரிகளின் தவறான மேலாண்மை குறித்து கவனத்தை ஈர்த்த இவர், புலிகள் திட்டத்தினை விமர்சித்தார். இவரது கடைசி புத்தகமான தி லாஸ்ட் டைகர் (ஆக்சுபோர்டு யுனிவர்சிட்டி பிரசு) இந்த கூற்றினை வலுவாக கூறுகிறது.

இந்தியாவின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் மீது தாப்பர் தொடர்ந்து விமர்சித்ததில் ஒன்று ஆயுதமேந்திய ரோந்துப் பணிகளின் மூலம் வேட்டையாடுவதைத் தடுக்க இது விரும்பவில்லை என்பதும், அறிவார்ந்த அறிவியல் ஆய்வுகளுக்கு காடுகளில் அனுமதி இல்லை என்பதும் மையக் கருத்தாகும்.

'மச்ச்லி' என்ற புலியுடனான iவரது புகழ்பெற்ற உறவு இவரது சில வரலாறுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[9] தாப்பரின் மிகவும் நேசத்துக்குரிய புலிகள் பிபிசி ஆவணப்படமான மை டைகர் ஃபேமிலியில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.[10]

இறப்பு

[தொகு]

தாப்பருக்கு 2024-இல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிசிச்சையிலிருந்த் தாப்பர் 2025 மே 31 அன்று, தனது 73 வயதில் புது தில்லியில் உள்ள தனது வீட்டில் காலமானார்.[2]

2006இல் இந்தியாவின் பந்தவ்கர் சரணாலயத்தில் ஒரு புலி

தேர்ந்தெடுக்கப்பட்ட தொலைக்காட்சி படைப்புகள்

[தொகு]
  • புலிகள் நெருக்கடி-Tiger Crisis (1994)
  • புலிகளின் நிலம் -Land of the Tiger(1997)
  • புலிகள் கோட்டை-Tigers' Fortress (2000)
  • டைகர் பாரடைஸில் ஆபத்து-Danger in Tiger Paradise (2002)
  • புலிகளைத் தேடுதல்-Search for Tigers (2003)
  • என் புலி குடும்பம்-My Tiger Family (2024) (2024) [11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இந்தியாவின் ‘புலி மனிதர்’ மரணம்" (in தமிழ்). தின மலர் 74 (269): 16. 1 சூன் 2025.
  2. 1 2 Valmik Thapar, conservationist and chronicler of India’s tigers, dies at 73
  3. "Archives Top and Latest News".
  4. "Why Valmik Thapar Needs a Plan B". 18 December 2005.
  5. Walia, Nona (15 September 2002). "Tiger, tiger burning bright". The Times of India இம் மூலத்தில் இருந்து 3 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103060513/http://timesofindia.indiatimes.com/articleshow/22169790.cms.
  6. Sawhney, Anubha. "Hamir spells sonrise for Sanjana". The Times of India இம் மூலத்தில் இருந்து 4 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104043625/http://timesofindia.indiatimes.com/city/delhi-times/Hamir-spells-sonrise-for-Sanjana/articleshow/16379130.cms.
  7. Lalitha Sridhar (21 March 2012), "'If only Indira Gandhi was sitting there, asking, is that tiger safe?' Interview with Valmik Thapar", News & Features, InfoChange India, archived from the original on 27 May 2011
  8. "Showcasing the big cat". The Hindu (Chennai, India). 2 December 2008 இம் மூலத்தில் இருந்து 9 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131109140512/http://www.hindu.com/br/2008/12/02/stories/2008120250031400.htm.
  9. "Animal Planet features special series on Indian Wildlife- 'India Revealed'". 6 November 2004. Archived from the original on 22 June 2011. Retrieved 12 December 2010.
  10. "My Tiger Family - BBC Documentary". 14 August 2024.
  11. "BBC Two - My Tiger Family".

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்மிக்_தாப்பர்&oldid=4601884" இலிருந்து மீள்விக்கப்பட்டது