வால்டேர் மவுண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எட்வார்டு) வால்டேர் மவுண்டர்
(Edward) Walter Maunder
பிறப்பு(1851-04-12)12 ஏப்ரல் 1851
இலண்டன்
இறப்பு21 மார்ச்சு 1928(1928-03-21) (அகவை 76)
தேசியம்பிரித்தானியர்
துறைவானியல்
அறியப்படுவதுமவுண்டர் சிறுமம்
துணைவர்எடித் அன்னா பசுடின் (1875–1888)
அன்னி சுகாட் டில் இரசல் (1895–1928)

எட்வார்டு வால்டேர் மவுண்டர் (Edward) Walter Maunder) (12ஏப்பிரல் 1851 – 21 மார்ச்சு 1928) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் தன் சூரியக் கரும்புள்ளி ஆய்வுக்காகவும் மவுண்டர் சிறுமம் என வழங்கும் சூரியக் காந்த வட்டிப்பு அல்லது காந்தச் சுழற்சிக்காகவும் நினைவுகூரப்படுபவர். இந்தக் காந்த வட்டிப்பை 1645 முதல் 1715 வரை அமைந்ததை இனங்கண்டார்.

இளமையும் சொந்த வாழ்க்கையும்[தொகு]

மவுண்டர் 1851 இல் ஜான் வெசுலேயக் கழக அமைச்சரின் இளைய மகனாக இலண்டனில் பிறந்தார். இவர் இலண்டன் கிங் கல்லூரியில் கல்வி கற்றார். ஆனால் பட்டம் ஏதும் பெறவில்லை. இவர் தன் ஆய்வுகளுக்கு தேவைப்படும் நிதிக்காக வங்கி ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார்.

இவர் 1873 இல் கிரீன்விச் அரசு வான்காணகத்துக்கு திரும்பி வந்து கதிர்நிரலியல் உதவியாளராகச் சேர்ந்தார். இவர் 1875க்குப் பிறகு எடித் ஆன்னாவை மணந்தார். இவர் நான்கு மகன்களாகவும் இரண்டு பெண்களாகவும் ஆறு குழந்தைகளைப் பெற்றார். ஒரு மகன் குழந்தையாகவே இறந்துவிட்டார். [1]எடித் 1888 இல் இறந்ததும் இவர் 1890 இல் ஆன்னி சுகாட் டில் இரசலைச் சந்தித்தார் (பின்னர் ஆன்னி இரசல் மவுண்டர், 1868–1947). இரச்சல் கேம்பிரிட்ஜ் கிர்ட்டன் கல்லூரியில் படித்த வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் மவுண்டருடன் வாழ்நாள் முழுவதும் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். இரசல் அந்த வான்காணகத்தில் 1890 முதல் 1895 வரை மாந்தக் கணினியாக விளங்கினார்.

இவர் 1895 இல் இரசலை மணந்தார். ஆன்னி மவுண்டர் 1916 இல் அரசு வானியல் கழகம் ஏற்ற முதல் பெண் வானியலாளரானார்.

சூரிய நோக்கீடுகள்[தொகு]

படம் 2: மவுண்டர் சூரியக் கரும்புள்ளி பட்டம்பூச்சி விளக்கப் படம்". (இது நாசா மார்ழ்சல் விண்பரப்பு மையச் சூரியக் குழுவின் பதிவு.)


பிற வானியல் நோக்கீடுகள்[தொகு]

The Observatory 1883 (pp. 192–193) இதழில் மவுண்டர் நோக்கி விவரித்த 1882 நவம்பர் 17 இல் நிகழ்ந்த வியத்தகு காட்சி. April 1916 (pp. 213–215) இதழில் அக்காட்சியை இவர் "அரோரல் கற்றை" எனவும் "வியப்பான வானியல் வருகையாளர்" எனவும் பெயரிட்டார். இது வனியலாளரும் அரோரா வல்லுனரும் ஆகிய ஜானிரேண்டு கேப்பிரான் வரைந்த வரைபடம், கில்டு டவுன் வான்காணகம், சுரே, பிரித்தானியா. இவரும் இக்காட்சியை நோக்கியுள்ளார். Philosophical Magazine, May 1883. இதழில் இருந்து.

பிரித்தானிய வானியல் கழகத்தை நிறுவல்[தொகு]

இவர் 1890 இல் பிரித்தானிய வானியல் கழகத்தை நிறுவுவதில் முன்னோடியாக விளங்கினார்.

வெளியீடுகள்[தொகு]

நூல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • A. J. Kinder "Edward Walter Maunder: His Life and Times" Journal of the British Astronomical Association Vol. 118 (1) 21–42 (2008).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்டேர்_மவுண்டர்&oldid=3580769" இலிருந்து மீள்விக்கப்பட்டது