வால்டேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிறப்பு[தொகு]

வால்டேர் அவர்கள் 1694 ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் தேதி பாரீஸ் நகரில் பிறந்தார்.

படிப்பு[தொகு]

பாதிரிகளிடம் லத்தீன் மொழி கற்றார். ஆங்கிலம் மற்றும் ஸ்பானிசும் கற்றுத்தேர்ந்தார்.அப்பாவின் ஆசைப்படி வழக்கறிஞர் ஆனார்.

புரட்சி[தொகு]

பிரென்சு புரட்சிக்கு வித்திட்ட வித்தகர். ஏகாதிபததியத்திற்கு எதிராக போராடியவர். அடிமைத்தளையை உடைத்தெறியுங்கள் என முழக்கமிட்டவர். சமூக சீர்திருத்தக் கொள்கையை வெளிப்படையாக எழுதி பேசியவர். நையாண்டி நடையில் சமூக அவலங்களைத் தோலுரித்தவர். தனது நாடகங்கள் மூலம், சமூக சசீர்திருத்தங்களை மேற்கொண்டவர். தனது கவிதைகள் ,கட்டுரைகள் ஆகியவற்றின் மூலம் சமுதாய புரட்சிக்கு வித்திட்டவர். தன 83 ஆம் வயதில் அய்ரீன் என்னும் நாடகத்தை எழுதினார். இந்ந நாடகம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது

"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்டேர்&oldid=2339019" இருந்து மீள்விக்கப்பட்டது