உள்ளடக்கத்துக்குச் செல்

வால்கூர்நீட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறால் லிட்டோபின்னேயசு செடிபெரசு, வால்கூர்நீட்சி (வண்ணத்தில்)
வால்கூர்நீட்சி (அம்பு எண் 3) குதிரைலாட நண்டு கார்சினோசுகார்பியசு ரோட்டண்டிகாடா

வால்கூர்நீட்சி (Telson)(பண்டைய கிரேக்க τέλσον 'மட்டுநிலம், எல்லை') என்பது கணுக்காலிகளின் உடலின் கடைசிப் பிரிவாகும். வரையறையைப் பொறுத்து, வால்கூர்நீட்சி கணுக்காலிகளின் உடலின் இறுதிப் பகுதியாகக் கருதப்படுகிறது. பிற கண்டங்களைப் போலல்லாமல் கருச்செல்லிலிருந்து இப்பிரிவு தோன்றாததால் உண்மையான உடல் பிரிவாகக் கருதப்படாமல் கூடுதல் பிரிவாகக் கருதப்படுகிறது.[1] பிற கண்டங்களில் காணப்படும் இணை உறுப்புகள் இதில் எதுவும் இல்லை. ஆனால் பிளவுபட்ட வால் போன்று "வால் பர்கா" காணப்படும். வடிவமும் அமைப்பும் சிற்றினத்திற்குச் சிற்றினம் வேறுபடுகின்றன.

ஓட்டுடலிகள்

[தொகு]

நண்டு, இறால், ஏனைய பிற பத்துக்காலிகளில், வால்கூர்நீட்சி, வாற்பாதங்களுடன் சேர்ந்து விசிறி போன்ற அமைப்பினை உருவாக்குகிறது. இது காரிடாய்டு தப்பிக்கும் எதிர்வினையில் ஒரு துடுப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அபாயத்தில் உள்ள விலங்கு விரைவாகத் தன் வாலை வளைத்து, பின்னோக்கிச் செல்ல இயலும். இந்த முறையில் கிரில் வினாடிக்கு 60 செமீ வேகத்தை அடைய முடியும். குறைந்த வெப்பநிலை இருந்தபோதிலும், ஒளியியல் தூண்டுதலுக்கான தூண்டுதல் நேரம் 55 மில்லி விநாடிகள் மட்டுமே.

ஐசோபோடாவிலும் டானைடேசியாவிலும் (பெரும் வரிசை பெராகரிடா) கடைசி வயிற்று உடல் பிரிவு வால்கூர்நீட்சியுடன் இணைக்கப்பட்டு, ஒரு "பிளோடெல்சன்" என்ற அமைப்பினை உருவாக்குகிறது.[2]

கெலிசரேட்டு

[தொகு]
கோட்டென்டோட்டா தாமுலசு தேள், வால்கூட்நீட்சியுடன்

சில கெலிசரேட்டுகளின் வலடி முள்ளினைக் குறிக்க வாலடிநீட்சி என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.[3][4] கெலிசரேட்டுகளில் பல புதைபடிவச் சிற்றினங்களிலும் (யூரிப்டெரிட்கள்), தற்போதுள்ள விலங்குகளிலும் (குதிரைலாட நண்டு "வால்"; தேள் கொடுக்கு போன்றவை) வால்கூர்நீட்சித் தெளிவாகக் காணப்படுகிறது. இந்தச் சூழலில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று சில வகைப்பாட்டியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.[5]

எண்ணற்ற காலிகள் (மிரியோபோடா)

[தொகு]
எப்பிக்கிராப்ட் (கைப்போபிராப்ட்) மற்றும் பாராபிராக்ட்கள் (பி) உட்பட ஒரு ஆயிரங்காலிகளின் வால்கூர்நீட்சி

ஆயிரங்காலிகளில், வால்கூர்நீட்சி கால் இல்லாத முன்-குத உடல் பிரிவைக் கொண்டுள்ளது. இது ஓர் எப்பிக்கிராப்ட் என்று அழைக்கப்படும் பின்புற நீட்டிப்பைக் கொண்டிருக்கலாம். ஓர் இணை குத அடைப்பிதழ் (பாராபுரோக்ட்சு) அல்லது ஆசன வாயினை மூடக்கூடிய தட்டினையும் கொண்டுள்ளன. மேலும் ஆசனவாயுக்குக் கீழே காணப்படும் ஒரு தட்டு (ஹைபோபுரோக்டட்) குதவடிச் செதில் என்று அழைக்கப்படுகிறது.[6][7]

நூறுகாலிகள், இரண்டு குத அடைப்பிதழ்களைக் கொண்ட, பிறப்புறுப்பு திறப்புகளுக்குப் பின்புறமாக, உடலின் பின்பக்கமாக வால்கூர்நீட்சியினைக் கொண்டுள்ளது.[8]

அறுகாலிகள்

[தொகு]

சிறிய அளவில் மண்ணில் வாழும் விலங்குகளின் வரிசையான புரோட்டூரன்கள் மட்டுமே வால்கூர்நீட்சியினைக் கொண்ட அறுகாலிகள் ஆகும்.

மேலும் காண்க

[தொகு]
  • ஓபிஸ்டோசோமா
  • பைகிடியம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Crustacea Glossary::Definitions". research.nhm.org. Retrieved 2021-08-03.
  2. S. J. Keable, G. C. B. Poore & G. D. F. Wilson (October 2, 2002). "Australian Isopoda: Families". Australian Museum.
  3. Richard C. Brusca & Gary J. Brusca (2003). Invertebrates (2nd ed.). Sinauer Associates. pp. 1–936. ISBN 0-87893-097-3.
  4. E. E. Ruppert & R. D. Barnes (1994). Invertebrate Zoology (6th ed.). Saunders. ISBN 0-03-026668-8.
  5. Karl-Ernst Lauterbach (1980). "Schlüsselereignisse in der Evolution des Grundplans der Arachnata (Arthropoda)" (in de). Abhandlungen des Naturwissenschaftlichen Vereins in Hamburg. NF 23: 163–327. 
  6. Sierwald, Petra; Bond, Jason E. (2007). "Current Status of the Myriapod Class Diplopoda (Millipedes): Taxonomic Diversity and Phylogeny". Annual Review of Entomology 52 (1): 401–420. doi:10.1146/annurev.ento.52.111805.090210. பப்மெட்:17163800. 
  7. Mesibov, Robert. "Tail". External Anatomy of Polydesmida. Retrieved 4 November 2013.
  8. Lewis, J. G. E. (2008). The Biology of Centipedes (Digitally printed 1st paperback version. ed.). Cambridge: Cambridge University Press. ISBN 9780521034111.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்கூர்நீட்சி&oldid=4180784" இலிருந்து மீள்விக்கப்பட்டது