உள்ளடக்கத்துக்குச் செல்

வார்விக் ஆம்ஸ்ட்ராங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உவாரிக் ஆர்ம்சுட்ரோங்
Warwick Armstrong
1902 இல் ஆர்ம்சுட்ரோங்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்உவாரிக் உவின்ட்ரிட்ச் ஆர்ம்சுட்ரோங்
பிறப்பு(1879-05-22)22 மே 1879
கினெட்டொன், விக்டோரியா
இறப்பு13 சூலை 1947(1947-07-13) (அகவை 68)
டார்லிங் முனை, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
பட்டப்பெயர்The Big Ship
உயரம்6 அடி 3 அங் (1.91 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நேர்ச்சுழல்
பங்குபல்-துறையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 80)1 சனவரி 1902 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு16 ஆகத்து 1921 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1898/99–1921/22விக்டோரியன் புஷ்ரேஞ்சர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்-தரம்
ஆட்டங்கள் 50 269
ஓட்டங்கள் 2,863 16,158
மட்டையாட்ட சராசரி 38.68 46.83
100கள்/50கள் 6/8 45/57
அதியுயர் ஓட்டம் 159* 303*
வீசிய பந்துகள் 8,022 43,313
வீழ்த்தல்கள் 87 832
பந்துவீச்சு சராசரி 33.59 19.71
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 50
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 5
சிறந்த பந்துவீச்சு 6/35 8/47
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
44/– 275/–
மூலம்: CricketArchive, 18 திசம்பர் 2007

வார்விக் விண்ட்ரிட்ஜ் ஆம்ஸ்ட்ராங் (Warwick Windridge Armstrong; 22 மே 1879 - 13 சூலை 1947) ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார்.இவர் 1902 மற்றும் 1921 க்கு இடையில் 50 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். ஒரு பன்முக வீரரான, இவர் 1920 மற்றும் 1921 க்கு இடையில் பத்து தேர்வுத் துடுப்பட்டப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் தலைவராக இருந்தார்.அதில் எட்டு தேர்வு போட்டிகளில் வென்றார் மற்றும் இரண்டு போட்டிகளில் தோற்றார். இவரின் தலைமையிலான ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 1920 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஆஷஸ் தொடரில் விளையாடியது . அந்தத் தொடரில் 5-0 எனும் கணக்கில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி தொடரை இங்கிலாந்துத் துடுப்பட்ட அணியிடம் இழந்தது.2000 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட ஹால் ஆஃப் ஃபேமில் இவர் சேர்க்கப்பட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

ஆம்ஸ்ட்ராங் 1879 ஆம் ஆண்டில் விக்டோரியன் நகரமான கினெட்டனில் பிறந்தார். ஜான் மற்றும் இவரது மனைவி அமெலியா (நீ ஃப்ளின்) ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார்.ஜான் ஒரு ஆங்கிலிகன் ; அமெலியா ஒரு கத்தோலிக்கராக இருந்தார் .[1] ஆம்ஸ்ட்ராங் குடும்பம் 1880 ஆம் ஆண்டில் மெல்போர்னுக்கு குடிபெயர்ந்தது. விக்டோரியாவின் எமரால்டு ஹில்லின் உள் புறநகரில் குடியேறியது. 1888 ஆம் ஆண்டில் விக்டோரியாவின் வடக்கு கால்பீல்டில் உள்ள "அரா க்ளென்" என்ற பரம்பரை வீட்டிற்குச் சென்றனர்.[2]

மெல்போர்னில் உள்ள தனியார் பள்ளிகளின் குழுவான பள்ளிகள் சங்கத்தின் உறுப்பினரான கம்லோடன் பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் பயின்றார். 1893 ஆம் ஆண்டில் , இவர் பள்ளி லெவன் அணியில் இடம் பெற்றார். ஆம்ஸ்ட்ராங் அருகிலுள்ள கால்பீல்ட் துடுப்பாட்ட சங்கத்தில் சேர்ந்தார் மற்றும் 15 வயதில் சங்கத்தின் மூத்தார் அணியில் விளையாடினார்.

19 வயதில் பள்ளியை விட்டு வெளியேறிய ஆம்ஸ்ட்ராங் தனது தந்தையின் முன்னாள் சங்கமான தென் மெல்போர்னில் ஆஸ்திரேலிய தேர்வுத் துடுப்பாட்டத் தலைவர் ஹாரி ட்ராட் தலைமையில் சேர்ந்தார்.[3] ஆம்ஸ்ட்ராங் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார்.அதில் பல்கலைக்கழகத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக,101 ஓட்டங்கள் எடுத்தார் இவரது முன்னாள் துடுப்பாட்ட சங்கமான செயின்ட் கில்டாவுக்கு எதிராக 173 ஓட்டங்கள் எடுத்தார்.[4] ஜனவரி 1899 இல் ஹோபார்ட்டில் டாஸ்மேனியா துடுப்பாட்ட அணிக்கு எதிராக விக்டோரியா துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்த இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், அணியில் ஏழு பேரில் ஒருவராக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இவர் 6 மற்றும் 33 ஓட்டங்களையும் 27 நிறைவுகள் வீசி 78 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இழப்புகளைக் கைப்பற்றினார்.[5]

சொந்த வாழ்க்கை

[தொகு]

ஜூலை 1913 இல், நியூ சவுத் வேல்ஸின் ரிவரினா பகுதியில் அதிக அளவிலான நிலங்களை வைத்திருந்த ஒரு செல்வந்த ஐரிஷ் ஆஸ்திரேலிய ஆயர் மகளான அய்லின் ஓ'டோனலை மணந்தார்.[6] வாகா வாகாவிற்கு எதிரான போட்டியில் ஆம்ஸ்ட்ராங் மெல்போர்ன் துடுப்பாட்ட அணிக்காக விளையாடிய போது இவரைச் சந்தித்தார்.[7] ஆம்ஸ்ட்ராங்கும் இவரது புதிய மனைவியும் மெல்போர்னில் குடியேறினர், 1935 ஆம் ஆண்டில் வணிக காரணங்களுக்காக சிட்னியின் புறநகர்ப் பகுதியான எட்ஜெக்லிஃப் நகருக்குச் சென்றனர்.[8]

சான்றுகள்

[தொகு]
  1. Haigh, pp. 7–14.
  2. Haigh, p. 17.
  3. Haigh, p. 29.
  4. Haigh, p. 30.
  5. Haigh, pp. 30–31.
  6. Haigh, p. 246.
  7. Haigh, pp. 204–206.
  8. Haigh, p. 406.

உசாத்துணைகள்

[தொகு]
  • Haigh, Gideon (2001). The Big Ship: Warwick Armstrong and the making of modern cricket. Melbourne: Text. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-877008-84-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்விக்_ஆம்ஸ்ட்ராங்&oldid=3986827" இலிருந்து மீள்விக்கப்பட்டது