உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:Subcat guideline

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
✔ இப்பக்கம் தமிழ் விக்கிபீடியாவில் {{{1}}} தொடர்பான நடைமுறைகளை ஆவணப்படுத்துகிறது. கட்டாயமில்லை எனினும் இங்கு கூறப்பட்டுள்ளவற்றை பின்பற்றுமாறு வேண்டப்படுகிறீர்கள். விதிவிலக்குகள் தோன்றினால் பகுத்தறிவுடன் கூடிய நடைமுறையைப் பின்பற்றுங்கள்! முரண்பாடுகள் தோன்றின் பொது இணக்கத்தை அடையுமுன்னர் மாற்றங்களைச் செய்யாதிருங்கள்! முரண் களைய இதன் பொது பேச்சுப் பக்கத்தைப் பயன்படுத்துங்கள்!
✔ இந்தப்பக்கம் தமிழ் விக்கிபீடியாவில் {{{1}}} தொடர்பான நடைமுறைகளை ஆவணப்படுத்துகிறது. விதியாக ஏற்கப்படாவிட்டாலும் இங்கு கூறப்பட்டுள்ளவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விதிவிலக்குகள் தோன்றுமாதலில் பகுத்தறிவுடன் கூடிய நடைமுறையைப் பின்பற்றவும், முரண்பாடுகள் தோன்றும் போது பொது இணக்கத்தை அடையுமுன்னர் மாற்றங்களைச் செய்வதைத் தவிர்க்கவும், இதன் பொது பேச்சுப் பக்கத்தைப் பயன்படுத்தவும்.

மேலுள்ளவற்றில் எது சரியானது?
விக்கிப்பீடியாவில் முன்னிலை தவிற்கப்பட வேண்டுமா?
பின்பற்றவும், தவிர்க்கவும், பயன்படுத்தவும் முதலியவை கட்டளைச் சொற்களா (imperative) அல்லது உம்மைத்தொகையா (conjunction)? ஐயம் களைந்தமைக்கு (முன்னதாகவே) நன்றிகள் - ʋɐɾɯn (பேச்சு) 11:01, 5 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

எதுவும் கட்டயமில்லை என்றாலும், முதலாவது நன்றாகவே உள்ளது. இரண்டாவதில், "கேட்டுக்கொள்ளப்படுகிறது போன்ற சொற்கள் அந்நியமாகப் படுகிறது.--Kanags \உரையாடுக 11:09, 5 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
அருண், இந்த வார்ப்புரு ஓர் பயனருடனான தொடர்பாடலாகும்; எனவே முன்னிலையில் உள்ள முதற்பெட்டியே பொருத்தமானது. மேலும் பல வார்ப்புருக்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டியுள்ளது. எளிமையான மொழியும் தெளிவான வழிகாட்டல்களும் இல்லை என்பது பல பயனர்களின் குறைபாடாகும். ஆனால் கட்டுரைவெளியில் இவ்வாறான முன்னிலை நடை தவிர்க்கப்பட வேண்டும்.
பி.கு:மேலே பகுத்தறிவு என்பதற்கு மாறாக பொதுவறிவு (common sense) எனலாம் என எண்ணுகின்றேன்.--மணியன் (பேச்சு) 11:38, 5 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
பொதுவறிவு - general knowledge, common sense - இயல்பறிவு?--Kanags \உரையாடுக 07:35, 8 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Subcat_guideline&oldid=1930382" இலிருந்து மீள்விக்கப்பட்டது