வார்ப்புரு பேச்சு:Speed-delete-on

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் விக்கிபீடியாவில் தீவிரமாகப் பங்களித்துவரும் பயனர்களின் எண்ணிக்கை இன்னமும் குறைவாக இருப்பதனால் வழங்கப்படும் கால அவகாசத்தை ஒரு கிழமையிலிருந்து ஒரு மாதமாக நீடிக்க முன்மொழிகிறேன். --கோபி 08:55, 7 பெப்ரவரி 2007 (UTC)

கோபி, உண்மையில் முக்கியமான தலைப்புகள், வழக்கமான பங்களிப்பாளர்களின் தலைப்புகள் ஆகியவற்றை நீண்ட காலம் விட்டு வைத்து தான் வருகிறோம். ஒரு கிழமை காலம் என்பதை வலியுறுத்தியவர்களில் நீங்களும் ஒருவர். எவருக்கும் ஆட்சேபணை இல்லை என்றால் ஒரு மாத காலம் ஆக்கலாம். --Ravidreams 09:49, 7 பெப்ரவரி 2007 (UTC)

நான் வலியுறுத்தியது உண்மைதான் :-) ஆனால் எது முக்கியமான தலைப்பு, யார் முக்கியமான பங்காளிகள் போன்றவற்றை நீக்குபவர்கள் தீர்மானிப்பதைத் தவிர்த்துக் கொள்வது பொருத்தமாகப் படுகிறது. ஆதலால் போதிய அவகாசங் கொடுத்து நீக்குவோமே! --கோபி 09:56, 7 பெப்ரவரி 2007 (UTC)

:)--Ravidreams 10:04, 7 பெப்ரவரி 2007 (UTC)

கோபி, அவகாசத்தை ஒரு மாதமாக மாற்றுகிறேன்.--Ravidreams 17:01, 12 பெப்ரவரி 2007 (UTC)

விக்கிப்பீடியாவில் ஒரு குறுங்கட்டுரை எழுதுபவர் ஒரு வரியை இரண்டு மூன்று துண்டுகளாக உடைத்து எழுதி விட்டு விக்கித் தரத்தில் உள்ளது என வாதிடலாம். எனவே "தமிழ் விக்கியில் கட்டுரைகள் குறைந்தபட்சம் 3 அல்லது 4 வரிகளைக் கொண்டிருக்க வேண்டும்" என்ற வரிகளை நீக்கியிருக்கிறேன். எழுதப்படும் வரிகளின் தரத்தைப் பொறுத்து அதனை நீக்கலாமா விடலாமா என்பதைத் தீர்மானிக்கலாம்.--Kanags \உரையாடுக 22:13, 14 ஆகத்து 2011 (UTC)
”3 அல்லது 4” என்பதை "gaming the system" செய்யக்கூடும் என்பதை ஒப்புகிறேன். ஆனால் இவ்வரிகள் இல்லாமல் எதற்காக கட்டுரையை நீக்கப் பரிந்துரைக்கிறோம் என்பது தெளிவில்லாமல் உள்ளது. “கூடுதல் உள்ளடக்கங்கள்” எதற்காக சேர்க்க வேண்டும் என்ற விளக்கமில்லாமலும் உள்ளது. புதிய பயனர்களுக்கு இந்த நீக்கல் வார்ப்புரு ஏன் இடப்பட்டது, அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதை விளக்குவது போல அமைய வேண்டும். எனவே மேலும் ஓரிரு வரிகள் இதில் இருப்பது அவசியமென் நினைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 04:16, 15 ஆகத்து 2011 (UTC)

விக்கிப்பீடியா பேச்சு:குறுங்கட்டுரை[தொகு]

விக்கிப்பீடியா பேச்சு:குறுங்கட்டுரை தெளிவு படுத்தப்படும் வரை இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. --Natkeeran (பேச்சு) 15:38, 30 திசம்பர் 2013 (UTC)

பயனர் கவன ஈர்ப்பு[தொகு]

இந்த வார்ப்புரு இடப்படும் பெரும்பான்மையான கட்டுரைகள் மேம்படுத்தப்படாமல் நீக்கப்படுகின்றன என்று நினைக்கிறேன். கட்டுரையைத் தொடங்கியவர் / முனைப்பான பங்களிப்பை அளித்தவரின் கவனத்தை ஈர்த்தால் இந்த நிலை மேம்படும். இப்போது பேச்சுப் பக்கங்களில், பயனரின் பக்கத்துக்கான இணைப்பைத் தந்து கவனத்தை ஈர்க்கிறோம் அல்லவா? அது போல் இந்த வார்ப்புரு இடும் போதும் செய்யலாம். வார்ப்புருக்குள்ளேயே பயனர் பெயர் இடுவதற்கானன place holder உருவாக்கினால் உதவும். வார்ப்புரு வல்லுநர்கள் உதவ வேண்டுகிறேன். நன்றி. கவனிக்க: அன்டன், செகதீசுவரன், செயரத்தினா.

வார்ப்புரு பயன்படுத்துவோர் கவனத்துக்கு[தொகு]

தமிழ் விக்கியின் அடிப்படை விதிகளைப் பின்பற்றிய கட்டுரைகளுக்கு (3 வரிகள், காப்புரிமை மீறாதல்) நீக்கல் வார்ப்புரு இடுவதானால், அதற்கான விளக்கத்தைப் பேச்சுப் பக்கத்தில் தந்து இடவும். நீக்குவதற்கு முன்பும் கவனித்து நீக்கவும். --Natkeeran (பேச்சு) 17:03, 12 மே 2014 (UTC)