வார்ப்புரு பேச்சு:Infobox settlement

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

The fields blank_name, blank1_name seem to be used twice in 2 sections near the end of the template. This results in the content appearing twice. Can someone check if the second instance of the variables can be removed? --சிவகோசரன் 06:11, 12 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

முதல் instance நீக்கி இருக்கிறேன். சரியானது போல இருக்கிறது. சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 06:18, 12 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
சரியாக இருக்கின்றது. நன்றி --சிவகோசரன் 04:26, 15 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

இவ்வார்ப்புருவில் பிழை உள்ளது. எல்லா கட்டுரைகளிலும் இப்பிழை தெரிகிறது. நான் முயன்று பார்க்கலாமா? தவறிருந்தால் மீளமைத்து விடுகிறேன். ஒப்புதல் கிடைக்குமா? ஏனென்றால், இவ்வார்ப்புரு சில நூறு கட்டுரைகளில் உள்ளது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:44, 14 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பிழை வந்தால் உடனடியாக மீள்வித்து விடுங்கள். ஆனாலும், என்ன பிழை எனக் கூறினால், மற்றவர்களும் உதவுவார்களே.--Kanags \உரையாடுக 22:10, 14 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

இணையத்தளம்? இணையதளம் தானே சரியானது?--Kuzhali.india (பேச்சு) 16:57, 1 செப்டம்பர் 2014 (UTC)

இணையத்தளம் என்றே சொல்லே சரியானது. மரம்+கிளை=மரக்கிளை என்பதைப் போல், இணையம்+தளம்=இணையத்தளம் என்றாகும். கூடுதலாக அறிய விரும்பினால், பேச்சு:வலைத்தளம் என்ற பக்கத்தில் உள்ள விளக்கத்தைப் படித்தறிக. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:11, 1 செப்டம்பர் 2014 (UTC)

தகவலுக்கு நன்றி. --Kuzhali.india (பேச்சு) 14:16, 3 செப்டம்பர் 2014 (UTC)

இந்த தகவல்சட்டத்தை பயன்படுத்தியுள்ள திருப்பிரிதி போன்ற கட்டுரைகளில் வரைபடங்களில் பிரச்சனைகள் காட்டுகின்றது. எவ்வாறு பிரச்சனையை மட்டும் நீக்குவது?--Kuzhali.india (பேச்சு) 14:16, 3 செப்டம்பர் 2014 (UTC)

எனக்கு பிழையாகத் தெரியவில்லையே! வேறு யாராவது திருத்தியிருக்கக் கூடும் என நினைக்கிறேன். வார்ப்புருவினுள் படத்தை இடும்போது, கொச்சையாக பல வரிகளில் பிழை ஏற்பட்டிருந்தால் அது Location Map என்ற படத்தினால் இருக்கக் கூடும். தமிழ் விக்கியில் இந்த படம் இல்லாத பட்சத்தில் பிழை ஏற்படும். இதை தீர்க்க, ஆங்கில விக்கிக்கு சென்று, Template:Location Map XX என்ற பக்கத்தில் உள்ள உரையை தமிழில் உருவாக்கிவிடுங்கள். XX என்பது அந்த மாநிலத்தை/ நாட்டை/இடத்தின் பிற அடையாளத்தைக் குறிக்கும். எ.கா: Location Map Uttar Pradesh, Location Map Russia. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:40, 3 செப்டம்பர் 2014 (UTC)

தகவலுக்கும் உதவிக்கும் நன்றி. விக்கியில் கைப்பேசி பதிப்பில் ஏதோ பிழை. தாங்கள் கூறியபின்னர் சரிபார்க்கும் போது கணிணிப்பதிப்பில் சரியாக உள்ளது. --Kuzhali.india (பேச்சு) 11:05, 6 செப்டம்பர் 2014 (UTC)

கொடி - முத்திரை[தொகு]

ஒரு நகரத்தின் கொடி மற்றும் முத்திரையை வழங்கும்போது அதன் கீழ் 'Flag' 'Seal' என்று ஆங்கிலத்தில் வருகிறது. 'கொடி' 'முத்திரை' என்று மாற்றுங்களேன்.
--சத்தியராஜ் (பேச்சு) 10:24, 7 ஏப்ரல் 2015 (UTC)

திருத்தியிருக்கிறேன். சரியாக வருகிறதா என குறிப்பிட்ட கட்டுரைகளில் பாருங்கள். coat of arms - மரபுச் சின்னம் என மொழிபெயர்த்திருக்கிறேன். இது சரியான சொற்றொடரா?--Kanags \உரையாடுக 10:54, 7 ஏப்ரல் 2015 (UTC)
கொடி மற்றும் முத்திரை சரியாக வருகிறது. :) --சத்தியராஜ் (பேச்சு) 11:17, 7 ஏப்ரல் 2015 (UTC)

மொழிபெயர்ப்பு[தொகு]

இந்த வார்ப்புரு முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை. பார்த்தவரையில் கீழ்காணும் மாற்றங்களைச் செய்யவேண்டும்.

  • 'Governing Body'- 'அரசாங்க பகுதி' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது சரியாக இல்லை.
  • 'பரப்பு' மற்றும் 'மக்கள்' பகுதியில் 'Total' என்பதினை 'நகரம்' என மாற்றியுள்ளது சரியாக இல்லை. மற்ற 'Urban', 'Metro', 'Rural' போன்றவற்றையும் மொழிபெயர்க்க வேண்டும்.
  • 'Population Rank' என்பது 'மக்கள் தரம்' என்று வருவது சரியாக இல்லை. 'Population' என்பதை 'மக்கள் தொகை' என மாற்றினால் சரியாக வரும் என தோன்றுகிறது.
  • Automatic Unit Conversion வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
  • நேரவளையத்தில் UTCஐ 'ஒ.ச.நே' என மாற்றலாம்.
  • iso_code 'ISO 3166 குறியீடு' என வரவேண்டும்.
  • 'Twin cities' மொழிபெயர்க்கப்படவில்லை. 'இரட்டை நகரங்கள்' என மொழிபெயர்க்கலாம். கட்டுரை உள் இணைப்பையும் மாற்றவேண்டும்.
  • 'Website'ஐ 'இணையத்தளம்' என்று மாற்றவேண்டும்

எவரேனும் உதவுங்கள்.
--சத்தியராஜ் (பேச்சு) 12:42, 7 ஏப்ரல் 2015 (UTC)

demonym என்பதை 'சுருக்கம்' என்று மொழிபெயர்த்திருப்பது தவறு. மாற்றவேண்டும். --சத்தியராஜ் (பேச்சு) 12:25, 22 ஏப்ரல் 2015 (UTC)

ஒ.ச.நே. - Syntax error in JSON[தொகு]

@Neechalkaran:ஒசநே என்று இந்த வார்ப்புருவினுள் இருக்கிறது. அதனை ஒ.ச.நே என மாற்றி சேமிக்க முயன்ற போது மேற்கண்ட வழு வருகிறது. எப்படி சீராக்குவது? அதேபோல, ஈரானிய சீர் நேரம் உருவாக்கியுள்ளேன். அதன்படி,IRST IRDT என்ற அஃகுப்பெயர்களுக்கும் இணைப்பு தர வேண்டும். இவை பகுப்பு:ஈரான் என்பதில் பல கட்டுரைகளில் பயன்படுகிறது. எனவே, கட்டுரைகளின் உள்ளே எழும் சிவப்பு இணைப்புகள் இதனால் நீங்கும்.--உழவன் (உரை) 02:57, 21 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வார்ப்புருவைச் சீர் செய்யவேண்டியதில்லை என நினைக்கிறேன். உதாரணத்திற்கு இந்தப் பக்கம் போல வழிமாற்றியும் ஒவ்வொரு நேரவளையத்திற்குப் பக்கமும் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.-நீச்சல்காரன் (பேச்சு) 09:59, 21 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
இந்த தகவற்பெட்டியின இடப்புறம் இருக்கும் ஆங்கிலச்சொற்களைத் தமிழுக்கு மாற்றும் போதும், இதே இடர் வருகின்றன. எடுத்துக்காட்டு, country-->நாடு--உழவன் (உரை) 01:56, 28 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
இடப்புறம் உள்ள ஆங்கிலச் சொற்களைத் தமிழுக்கு மாற்ற வேண்டாம்.--Kanags \உரையாடுக 07:01, 28 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
ஏன் என அறிய விரும்புகிறேன்--உழவன் (உரை) 08:26, 28 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── நீங்கள் எதனைக் கூறுகிறீர்கள் என அறிய முடியவில்லை. வார்ப்புருவா அல்லது தகவல்பெட்டியா? பொதுவாகக் கட்டுரையில் வரும் தகவல்பெட்டியில் உள்ள தகவல்கள அனைத்தும் தமிழில் தெரிய வேண்டும். எந்தக் அக்ட்டுரையில் பிழை வருகிறது? இணைப்புத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 08:50, 28 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

இரே, ஈரான் என்ற கட்டுரையில் இந்த வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனுள் தெரியும் ஆங்கிலச்சொற்களைக் குறித்தே, இந்த உரையாடலின் உட்பிரிவு தொடங்கப்பட்டது. உங்களைப்போலவே வார்ப்புருவின் ஆங்கிலப்பெயரை நானும் மாற்றுவது வேண்டாமென்றே எண்ணுகிறேன்.--உழவன் (உரை) 14:28, 28 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
@Info-farmer: வார்ப்புருவின் பெயர் எந்த மொழியிலும் இருக்கலாம். பெயர் தமிழில் இருந்தால் ஆங்கில வழிமாற்றமும் வைத்திருப்பது நல்லது. ஆனால் தகவல் பெட்டியில் தெரியும் தகவல்கள் அனைத்தும் இயன்றவரை தமிழில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். "இரே" கட்டுரையில் சில சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன.--Kanags \உரையாடுக 07:15, 29 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
ஆம். என்னால் இயன்றவரை தமிழுக்கு மாற்றுகிறேன். அயல்மொழிகளை தமிழுக்கு மாற்றுவதில் இடர்கள் உள்ளன. அதனால் தான் அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கில மூலச்சொல் அல்லது பாரசீக சொற்களை இணைத்துள்ளேன். வேண்டாமெனில் நீக்கிவிடவும்.--உழவன் (உரை) 07:29, 29 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

@Neechalkaran:ஒசநே குறித்தவை தற்போது வழுவின்றி ஆயிரகணக்கானக் கட்டுரைகளில் தெரிய, வார்ப்புருவில் உள்ள கட்டுரைகளை வழிமாற்று இன்றி ஒசநே+3:30, ஒசநே+4:30 உருவாக்கி விட்டேன். என்னுள் புரிந்துணர்வை ஏற்படுத்தியமைக்கு நன்றி.--உழவன் (உரை) 15:56, 4 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

தொகுத்தல்[தொகு]

@Kanags, AntanO, and Neechalkaran: வணக்கம். இந்த வார்ப்புருவை என்னால் தொகுக்க முடியவில்லை, அதற்கான காரணத்தை கூறுங்கள். நன்றி-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 01:38, 29 ஏப்ரல் 2021 (UTC)

இப்பக்கம் காக்கப்படவில்லை, யாவரும் தொகுக்கலாமே. என்ன வழுச் செய்தி வருகிறது? தடைப்பதிகை கொண்ட ஐபி முகவரி என்று ஏதேனும் சொல்கிறதா?-நீச்சல்காரன் (பேச்சு) 17:23, 29 ஏப்ரல் 2021 (UTC)
@Neechalkaran: இதனை தொகுத்து சேமித்தால் Syntax error in JSON என்று வருகிறது. இதில் உள்ள row number 52-ல் Body என்று உள்ளதை நீக்கிவிட்டு, நிர்வாகம் என்று எழுத வேண்டும், ஆனால் அதை செய்ய முடியவில்லை.-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 04:02, 30 ஏப்ரல் 2021 (UTC)
இது மீடியாவிக்கியில் உள்ள ஏதோவொரு சோதனை அம்சம், நிரலில் JSON பிழையைக் காட்டுகிறது. இப்பக்கத்தின் துணைப்பக்கங்களில் அந்த வழு இருக்கலாம். இது என்ன வழு என்று ஆராய்ந்தவரை யூகிக்க முடியவில்லை. நான் திருத்தும் போதும் எனக்கும் இதே வழுதான் வந்தது. தற்போதைக்கு நீங்கள் கேட்டவற்றை வேறு வழியில்(edit action செய்யாமல் move action செய்து) மாற்றியுள்ளேன் ஆனால் அதே வழு இப்பக்கத்தில் உள்ளது. வேறு வழியில் செய்ததால் பக்கத்தின் வரலாறு அழிந்துள்ளது. வேறு வழி தெரியவில்லை, தெரிந்தபின்னர் வரலாற்றை மீட்டமைப்போம். -நீச்சல்காரன் (பேச்சு) 15:26, 3 மே 2021 (UTC)[பதிலளி]
@Gowtham Sampath:, phabricator வழியாக இந்த வழு இப்போது நீங்கிவிட்டது. இனி அனைவரும் தொகுக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 16:01, 3 மே 2021 (UTC)[பதிலளி]
@Neechalkaran: நன்றி-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 08:03, 4 மே 2021 (UTC)[பதிலளி]