வார்ப்புரு பேச்சு:Cc-by-sa-3.0,2.5,2.0,1.0

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரிமத்தின் சொற்றொடர்[தொகு]

இப்பொழுதுள்ள சொற்றொடர்:
இந்த ஆவணம் கிரியேட்டிவ் காமன்ஸ் அளிப்புரிமையின் படியான அட்ரிபியூஷன் செயார்எலைக் பதிப்புகள் 3.0, 2.5, 2.0, and 1.0 என்பவற்றின் கீழ் வழங்கப்படுகிறது.

பரிந்துரைப்பது:
இந்த ஆவணம் கிரியேட்டிவ் காமன்சு அளிப்புரிமையின் படி, உரிமையாளர் குறிப்பிட்டவாறு சுட்டி, அதே உரிமத்தின்கீழ் பகிர்வுரிமையுடன் அளிக்கப்படும் பதிப்புகள் 3.0, 2.5, 2.0, and 1.0 என்பவற்றின் கீழ் வழங்கப்படுகிறது.

செயார் எலைக் என்பது விளங்க வில்லை ஷேர் அலைக் அல்லது சேர் அலைக் என்று இருக்க வேண்டும். அதே உரிமத்தின் கீழ் தரும் பகிர்வுரிமை தான் ShareAlike. இச்சொற்கள் சட்டத்துறைக் கலைச்சொற்களாக கருதப்படலாம். ஆனால் பல மொழிகளுக்கு இடையே ஈடு நிறுவிய சொற்றொடர்களைக்கொண்டு பயன்படுத்தலாம். எனவே அதே உரிமத்தின் கீழ் தரும் பகிர்வுரிமை என்பதை பகிர்வுரிமை என்று ஒரு சொல்லால் வரையறை செய்து வழங்கலாம். அட்ரிபியூசன் என்பதனையும் உரிமையாளர் சுட்டு என்று வரையறை செய்து வழங்கலாம்.

--செல்வா 01:18, 13 ஜூலை 2009 (UTC)

பகிர்வுரிமை நன்றாக உள்ளது. அட்டிரிபியூசனை ஆக்குனர் சுட்டு எனலாமா? ஒப்புதலிருந்தால் இம்மாற்றங்களைச் செய்து வரையறைப் பக்கங்களுக்கு இணைப்பு தரலாம். -- சுந்தர் \பேச்சு 02:55, 13 ஜூலை 2009 (UTC)
கருத்துக்கு நன்றி சுந்தர். அட்ரிபியூசனில் ஆக்குநர் அல்லது ஆக்கூநர் படைப்புகளுக்கு உரிமையாளர் என்னும் கருத்து உள்ளது. உரிமையாளர் யார் என்பதனையும் ஆக்குநரே சுட்ட வேண்டுமாகையால், ஆக்குநர் சுட்டு என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். --செல்வா 03:00, 13 ஜூலை 2009 (UTC)