வார்ப்புரு பேச்சு:புதுப்பயனர் கட்டுரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியா:துரித நீக்கல் தகுதிகள் / Criteria for speedy deletion என்ற நடைமுறை ஏற்கெனவே இருப்பதால் இவ்வார்ப்புரு நடைமுறை அளவில் முரண்பாட்டினை ஏற்படுத்துகிறது. நடைமுறையைப் பின்பற்ற முன்னுக்குப் பின் முரண்பட்ட விதிகள் இருக்கக்கூடாது. இது நடைமுறையைப் பின்பற்றுபவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், தகுந்த அங்கீகாரத்துடன் இதைப் பயன்படுத்த வேண்டும். அதுவரை, இது பொருளற்றதே.

மேலும், இந்த வார்ப்புரு பயன்படுத்த வேண்டிய சூழல் என்ன? இதன் பயன்பாடு எதுவரை என்பதும் வரையறுக்கப்பட வேண்டும். --Anton (பேச்சு) 17:50, 30 செப்டம்பர் 2013 (UTC)

அண்டன், தாங்கள் சொல்வது உண்மைதான். புதிய பயனர்கள் உடனடியாக நீக்கப்படும் கட்டுரையால் அவர்கள் தொடர்ந்து பங்களிக்காமல் போய்விடுவார்கள் என்று சொல்லப்படுவதால், இந்த வார்ப்புரு உருவாக்கப்பட்டு பயன்படுத்த வேண்டுகோள் விடப்பட்டிருக்கிறது. இதை ஓரிரு வரிகளிலுள்ள கட்டுரைக்குப் பயன்படுத்தலாமே தவிர, பொருளற்ற கட்டுரைகளுக்குப் பயன்படுத்துவதில் எவ்விதப் பொருளுமில்லை, பயனுமில்லை. இந்தக் கட்டுரை எவ்வளவு காலத்திற்குப் பயன்படுத்தப்படும் என்கிற வரைமுறை எதுவும் உருவாக்கப்படாததால் வார்ப்புருவில் ஓரிரு வரி கட்டுரைகளுக்கான நீக்கல் கால வரையறையை அடிப்படையாகக் கொண்டு ஒரு மாத காலம் என்கிற அளவை நான் தற்போது சேர்த்தேன். இதற்கென வரைமுறைகள் உருவாக்கப்படும் வரை இந்த வார்ப்புரு பயன்பாட்டிலிருக்கட்டும். அதன் பின் எடுக்கப்படும் முடிவுகளுக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 18:01, 30 செப்டம்பர் 2013 (UTC)