வார்ப்புரு பேச்சு:தலைப்பை மாற்றுக

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோற்றம்[தொகு]

மிக்க நன்றி. இரவி! இத்தகையதொரு வார்ப்புருவை 2008 ஆம் ஆண்டிலேயே உருவாக்கியிருக்கிறீர்கள். --≈ உழவன் ( கூறுக ) 02:46, 22 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]

--≈ உழவன் ( கூறுக ) 04:03, 22 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]

வழிமாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:46, 22 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]
நன்றி. கனகு! இருப்பினும் ஒரு எண்ணம். இதனை ஏன் வழிமாற்று செய்ய வேண்டும். இரண்டையும் ஒருங்கிணைத்து, ஒற்றைமட்டும் பேணுவதால் என்ன விளவு ஏற்படும்.--≈ உழவன் ( கூறுக ) 02:06, 26 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]
நீங்கள் கூறுவது விளங்கவில்லை. தலைப்பை மாற்று என்ற வார்ப்புருவை நீக்கச் சொல்கிறீர்களா, அல்லது அதன் வரலாற்றுடன் தலைப்பை மாற்றுக என்ற வார்ப்புருவுடன் ஒன்றிணைக்கச் சொல்கிறீர்களா? அப்படி என்றால் ஒன்றிணைத்து விடுகிறேன்.--Kanags \உரையாடுக 02:12, 26 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]
ஒரு வார்ப்புருவே போதும் என்பதால், ஒன்றிணைக்கக் கோருகிறேன். முன்பு ஒரு முறை இரவி எனக்கு, தேவையற்ற வழிமாற்றுகளை நீக்க, விக்சனரியில் கற்றுக் கொடுத்ததாக ஞாபகம் அதனால் இதனை உங்களிடம் சொன்னேன்.--≈ உழவன் ( கூறுக ) 02:21, 26 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]
இன்னும் எனக்கு விளங்கவில்லை:) ஏன் வழிமாற்றை நீக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். தலைப்பு ஒருமையில் விளிப்பதால் இதனை நீக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. அப்படியானால் நீக்க உடன்படுகிறேன்.--Kanags \உரையாடுக 02:34, 26 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]
பேச்சுப் பக்கம் தேவையில்லாமல் நீளுவதாக பலர் நினைத்துவிடக்கூடும் என்பதால் நீங்கள் கேட்டுக் கொண்ட படி தலைப்பை மாற்று என்ற வார்ப்புருவை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 02:39, 26 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]
கட்டுரைகள் பலவற்றில் இது இணைக்கப்பட்டிருப்பதால் தெரியாமல் நீக்கி விட்டேன். மீள்வித்திருக்கிறேன். வழிமாற்று இருப்பதால் நன்மை தவிர தீமையில்லை.--Kanags \உரையாடுக 03:36, 26 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]
சரிங்க கனகு! உங்கள் தனிப்பக்கத்தில், தேவையெனில், மேலுள்ள வார்ப்புரு பயன்பாட்டுத் தொடுப்பைக் குறித்துக் கொள்ளுங்கள். எந்த வார்ப்புரு பயன்பாட்டின் எண்ணிக்கையை அறியலாமென்றே கருதுகிறேன். மீண்டும் மற்றொரு உரையாடலில் சந்திப்போம். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 03:48, 26 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]

உள்ளடக்கம் திருத்தம் தேவை[தொகு]

இவ்வார்ப்புருவில் உள்ள உள்ளடக்கத்தை திருத்த வேண்டும், விரிவாக எழுதவேண்டும். -- Mdmahir (பேச்சு) 10:19, 9 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

இவ்வார்ப்புருவிற்கான கால எல்லை என்ன?[தொகு]

அகனள், அகனன், ஈரர், திருனர் தலைப்பு குறித்து, ஏறத்தாழ 3வருடமாக கருத்தாடல் நடக்கிறது. 1980களில் உருவான en:LGBT என்ற ஆங்கில அஃகுப்பெயருக்கு, அங்கு பலவித பரிந்துரைகள் காணப்படுகின்றன. இது குறித்த அந்தந்த சமூகத்தாரும், எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், நாம் மட்டுமே முடிவு எடுத்தல் நிலைக்காது. இருப்பினும் ஒரு வேண்டுகோள். இதுபோல 300க்கும் மேற்பட்ட கட்டுரைகளில், தலைப்பு மாற்றம் குறித்து வார்ப்புரு இடப்பட்டுள்ளன. அவற்றை நீக்க, இப்பக்கம் ஒரு வழிகாட்டுதலாக அமைய வழிகாட்டுங்கள். எனவே, இது போல

  1. இணக்கமற்ற கட்டுரைகளிலும்,
  2. மாற்றுத்தலைப்புக்கான பரிந்துரையைத் தெரிவிக்காத கட்டுரைகளிலும்,
  3. உரையாடலுக்குப் பிறகு முடிவு எடுத்தக் கட்டுரைகளிலும் என அனைத்திலும், 30நாட்கள் மட்டுமே, இனி இந்த வார்ப்புரு இருக்கும். ஏனெனில், பல கட்டுரைகளில் வார்ப்புரு மட்டுமே இடுதல், நமது திட்டத்தின் வளர்ச்சியன்று. அனைத்திலும் ஏதோ ஒரு குறை உள்ளது என நாமே அறிவித்துக் கொள்ளுதல் சிறப்பன்று. தேவைகளை உருவாக்க, உரிய பகுப்பிடும் முறையே போதுமே. வார்ப்புரு இடல் முறைக்கு, இரண்டாமிடம் கொடுப்போமே. இப்பகுப்பிடல் முறை, பின்னர் துப்புரவு பணிக்கு உதவும். மாற்றுகருத்து இருப்பின், 15நாட்களில் தெரிவிக்கக் கோருகிறேன்.--உழவன் (உரை) 02:36, 8 அக்டோபர் 2016 (UTC)Reply[பதில் அளி]