வார்ப்புரு பேச்சு:தமிழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்கீரன், கொடுந்தமிழ், நல்ல தமிழ் ஆகியவற்றை இந்த வார்ப்புருவிலும் கட்டுரைகளிலும் தருவதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். நல்ல தமிழ், கொடுந்தமிழ் இரண்டுக்கும் தீர்க்கமான வரையறைகளை தருவது கடினம். ஆளாளுக்கு வரையறை மாறும். தவிர, கொடுந்தமிழ், நல்ல தமிழ் என்பவை வலைப்பதிவுகளில் அண்மையில் அடிபட்ட சொற்களாகத் தெரிகின்றன. முறையாக அறிஞர்களால் ஆயப்பட்ட இயலா என்று தெரியவில்லை--Ravidreams 19:45, 23 பெப்ரவரி 2007 (UTC)

கொடுந்தமிழுக்கு தொல்காப்பியர் முதற்கொண்டு வரையறை உண்டு. நல்லதமிழுக்கு நாம் தான் வரையறை தரவேண்டும். --Natkeeran 19:51, 23 பெப்ரவரி 2007 (UTC)

கொடுந்தமிழ் குறித்து தொல்காப்பியர் சொல்லி இருந்தால், என் அறியாமைக்கு வருந்துகிறேன்--Ravidreams 19:57, 23 பெப்ரவரி 2007 (UTC)

தொல்காப்பியர்: தமிழை - செந்தமிழ் - தற்கால மதுரை???; பிற வட்டார வழக்கங்களை - 12 - கொடுந்தமிழ். அக்காலத்தில் தமிழ் என்பது இடத்தை (அல்லது இடத்தையும்) குறித்தாகவும், கொடுந்தமிழ் என்பதும் சுற்று வட்டாரத்தை குறிப்பதாகவும் நான் செந்தமிழ் கட்டுரையில் சுட்டியுள்ள ஆய்வுக்கட்டுரை தொல்காப்பியரை முன்வைத்து சுட்டியுள்ளது. --Natkeeran 20:00, 23 பெப்ரவரி 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:தமிழ்&oldid=106659" இலிருந்து மீள்விக்கப்பட்டது