வார்ப்புரு பேச்சு:ஜப்பானிய தொன்மவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

za என்ற ஒலியை தமிழில் எவ்வாறு காண்பிப்பது ?ஃஜ எனும் வழக்கை இணையத்தில் நிறைய தளங்களில் பார்த்துள்ளேன். அதை பயன்படுத்தவா ? வினோத் 06:38, 23 டிசம்பர் 2007 (UTC)


டெரன்ஸ், スサノオ மற்றும் スサノヲ என இரண்டு கனா எழுத்துக்கூட்டல்களை கொடுத்துள்ளனர். முன்னது சுசனொஒ எனவும் பின்னது சுசனொவொ எனவும் வரும். எனினும் சுசனொஒ என்பது சுசனோ என ஒலிக்கப்படும் என யூகிக்கின்றேன். ஏனெனில் ほのお ஹொனொஒ என்பது ஹொனோவாக உச்சரிக்கப்படுவதை கவனித்திருக்கிறேன். எனவே இதை எப்படி எழுத்துப்பெயர்ப்பதென தெளிவுபடுத்தவும் வினோத் 10:02, 23 டிசம்பர் 2007 (UTC)

டெரன்ஸ், கனா எழுத்துப்பெயர்ப்பை ஒரு தடவை சரி பார்க்கவும். நான் கேட்ட ஜப்பானிய மொழி அனைத்தும் ஜப்பானிய பாடல்களில் மட்டும் தான்(ஆயிரக்கணக்கான பாடல்களை வைத்துள்ளேன்).வரிகளை கவனித்திருக்கிறேன் பெரும்பாலும் எழுத்துமொழிக்கு ஏற்றவாறே தான் இருக்கும். எ.டு です என்பது desu எனவே பாடுவர், பேச்சுவழக்கில் இது des என வழங்கப்பெறுகிறது, fu கூட hu ஆகவே ஒலிக்கும். எனவே பெயர்களின் ஒலிபெயர்ப்புகளில் நான் நிறைய தவறுகள் செயதிருப்பின் பொறுத்தருளவும். தாங்கள் இந்த ஒலிபெயர்ப்புகளை சரிபார்க்குமாறு வேண்டுகிறேன் வினோத்