வார்ப்புரு பேச்சு:சிறவுப் பதக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தப் பதக்கம் விக்கிப்பீடியா சிறப்பு பங்களிப்பாளர் பதக்கம் அல்லது சிறந்த விக்கிப்பீடியர் பதக்கம் என்ற தலைப்புகளில் இருப்பது நல்லது. சிறந்த உழைப்பாளர் பதக்கம் விக்கிப்பீடியாவிற்கு உகந்த தலைப்பல்ல.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:38, 16 மார்ச் 2011 (UTC)

சரி. மாற்றிவிடுகிறேன். --சூர்ய பிரகாசு.ச.அ. 17:54, 16 மார்ச் 2011 (UTC)

THE WORKING MAN'S BARNSTAR என்பதன் படி சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்றேன். --சூர்ய பிரகாசு.ச.அ. 17:56, 16 மார்ச் 2011 (UTC)

உழைப்பாளர் நாள்மீன், உழைப்பாளர் பதக்கம் என்றும் சொல்லலாம். மாற்ற வேண்டாம். கருத்துக்காக. சிறப்பு என்னும் சொல் இல்லாமலும் அழைக்கலாம் என்பதற்காகச் சொன்னேன். பதக்கம் என்பதே சிறப்பு நோக்கி அளிப்பதுதானே :) தமிழில் சிறவு என்றால் சிறந்த செயல் என்று பொருள் உண்டு (பார்க்க கழக அகராதி). திருவாசகத்தில் திருச்சதகத்தில்
புறமே போந்தோம் பொய்யும் யானும்
    மெய்யன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம்
    பெற்றேன்யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்றொன்
    றறியாதார்
சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தாள்
    சேர்ந்தாரே. 

என்னும் பாட்டின் கடைசி வரியில் சிறவே செய்து என்பதன் பொருள் சிறந்த செயலே செய்து என்று பொருள். பிற இடங்களில் சிறாவு என்பது சிறப்பான நிலை என்றும் பொருள் படும். தக்க இடத்தில் சிறவு என்னும் சொல்லையும் ஆளலாம். சிறவுப் பதக்கம், சிறவுப் பரிசு என்றால் சிறந்த செயலுக்கான பதக்கம், சிறந்த செயலுக்கான பரிசு என்னும் பொருள் தரும். இக்கருத்தும் நினைவில் கொள்ளவே.. எதனையும் மாற்ற வேண்டும் என்று கூற அல்ல. --செல்வா 18:24, 16 மார்ச் 2011 (UTC)

திருவாசக அடிகள்,


உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
என்பதனையும் நினைத்துப் பார்க்கலாம்.--செல்வா 18:26, 16 மார்ச் 2011 (UTC)

செல்வா சிறவுப் பதக்கம் என்பது அருமையாக உள்ளது. புதிய சொல்லுக்கு நன்றி... --சூர்ய பிரகாசு.ச.அ. 19:15, 16 மார்ச் 2011 (UTC)