வார்ப்புரு பேச்சு:இந்திய பாலூட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
India tiger.jpg இந்திய பாலூட்டிகள் என்ற இக்கட்டுரை, விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் என்னும் திட்டத்துள் அடங்கியதாகும்.

இத்திட்டக் கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடையவர், இத்திட்டத்தில் உறுப்பினராகலாம். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவர், இத்திட்டப் பக்கத்திற்குச் சென்றால், அங்கு நிறைவேற்ற வேண்டியப் பணிகளின், பட்டியலைக் காணலாம்.

ஆங்கிலமும் தமிழும்[தொகு]

இந்த வார்புருவில் ஆங்கில பெயருக்கு அடுத்து "/" குறிக்கு பிறகு ஒத்த தமிழ் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆங்கில பெயர்களுக்கும் தமிழாக்கம் செய்துவிட்டு, அனைத்து பெயர்களும் அனைவருக்கும் ஒப்புதல் என்ற பிறகு, ஆங்கில பெயர்களை நீக்கி விடலாம் என்பது என் கருத்து. தமிழில் பாலூட்டிகள் இனத்திற்கு குடும்ப அளவில் பெயர் வைப்பது இதுவே முதன்முறை என நினைக்கிறேன் ஆதலால் முடிந்த அளவிற்க்கு மிகப் பொருத்தமாக செய்ய முயலுவோம். மேலும் பின்னாளில் இந்திய பாலூட்டிகள் போன்ற புத்தகங்கள் தயாரிக்கும் போதும் இவை பெரிதும் பயன்படும். அனைவரின் கருத்தும் ஆக்கமும் வரவேற்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பெயல்பாடுகள்: முதலில் குடும்பம்-பெயர்களில் கட்டுரைகள் எழுதிவிட்டு பின் துணைக்குடும்பம், பேரினம், சிற்றினம் என மேலிருந்து கீழ் முறையில் கட்டுரைகள் இயற்றலாம் என இருக்கிறேன். இந்த வார்ப்புரு சரிசெய்த பின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு வார்ப்புரு என்ற திட்டமும் இருக்கிறது.-கார்த்திக் 04:02, 27 ஜூலை 2009 (UTC)

 • ஏற்றுக்கொள்ளப்பட்ட சொற்களுக்குரிய, ஆங்கிலச்சொற்களை உடன் நீக்குதல் நலம்.--த* உழவன் 06:30, 5 ஜனவரி 2010 (UTC)

கார்த்திக், நல்ல திட்டம். வகைப்பாட்டில் மேலுள்ள பிரிவுகளைப் பற்றி எழுதிப் பின் படிப்படியாய் கீழுள்ள பிரிவுகளைப் பற்றி எழுதலாம். இப்பொழுது கீழ்க்கண்ட வரிசைப் பெயர்கள் குழப்பம் இல்லாதவை, ஓரளவுக்கு விளக்கங்களும் உள்ளன.

நாய்ப்பேரினம் அல்லது நாய்க்குடும்பம், பூனைப்பேரினம் அல்லது பூனைக்குடும்பம், குதிரைப்பேரினம் அல்லது குதிரைக் குடும்பம் என்னும் படி எளிமையாகப் பெயர் வைக்கலாம். குடும்பம், துணைக்குடும்பம் முதலியவற்றை குடு., து.கு. என்று பின்னொட்டும் இட்டு எழுதலாம். --செல்வா 04:54, 27 ஜூலை 2009 (UTC)

நல்ல முன்மொழிவு. இதே வரிசையில் Bovids என்பதை மாட்டுப்பேரினம் எனலாமா? --சுந்தர் \பேச்சு 07:24, 27 ஜூலை 2009 (UTC)
ஆப்பேரினம் எனலாம் (ஆவின் பால் நினைவிருக்கா?). அல்லது ஆன்பேரினம் எனலாம். ஆன் என்றாலும் ஆ தான். போ'விட்' என்பதற்குச் சரியான சொல்லா இருக்கும். −முன்நிற்கும் கருத்து செல்வா (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
ஆப்பேரினம் நன்றாக உள்ளது. ஆவின் பாலை மறக்க முடியுமா? :) -- சுந்தர் \பேச்சு 12:57, 28 ஜூலை 2009 (UTC)
ஆப்பேரினம் அருமை. சுருக்கமாக, அழகாக, ஆழமாக உள்ளது. தமிழின் சிறப்பு ஒற்றைச்சொல்லல்லவா.தமிழின் ஒற்றைச் சொற்கள்த* உழவன் 07:41, 5 ஜனவரி 2010 (UTC)

தமிழாக்கம் செய்தவையும்- செய்ய வேண்டியவை[தொகு]

கீழ்காணும் ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளது, எவரேனும் வேறு பொருத்தமான பெயர் இடவிரும்பினால் தற்போதுள்ள பெயரை அடுத்து "/" க்கு பிறகு இடலாம்.

 • en:Insectivora = பூச்சியுண்ணிகள் /
 • en:Hedgehogs = முள்ளெலிகள் /
 • en:Moles = துள்ளெலிகள் /
 • en:Shrews = அணத்தான்கள் /
 • en:Treeshrews = மரஅணத்தான் /
 • en:Chiroptera = வெளவால்கள் /கைச்சிறகிகள்
 • en:Fruit Bats = பழந்திண்ணி வௌவால்கள் /கனிவௌவால்கள்
 • en:Primates = முதனிகள் /
 • en:Lorises = தேவாங்குகள் /
 • en:Carnivora = கொன்றுண்ணிகள்(predator) / ஊனுண்ணிகள்
 • en:Dogs = நாய்க்குடும்பம் /
 • en:Bears = கரடிக்குடும்பம் /
 • en:Civets = புனுகு பூனைக்குடும்பம் /புனுகுக்குடும்பம்
 • en:Mongooses = கீரிப்பிள்ளைக்குடும்பம் /கீரிக்கும்பம்
 • en:Hyenas = கழுதைப்புலிக்குடும்பம் /
 • en:Felines/en:Cats = பூனைக்குடும்பம் /
 • en:Cetacea = நீற்பாலூட்டிகள் /
 • en:Delphinidae = கடல் ஓங்கில்கள் /கடலோங்கிகள்
 • en:River Dolphins = ஆற்றிட ஓங்கில்கள் /ஆற்றோங்கிகள்
 • en:Balaenoptridae = நகமியகற்றை திமிங்கலங்கள் /
 • en:Ziphiidae = அலகுத்திமிங்கலங்கள் /
 • en:Phocoenidae = கேழல்திமிங்கலங்கள் /
 • en:Dugongidae = ஆவுளிக்குடும்பம் /
 • en:Elephants = யானைக்குடும்பம் /
 • en:Perissodactyla = ஒற்றைப்படைக் குளம்பிகள் /
 • en:Horses = குதிரைக்குடும்பம் /
 • en:Rhinoceroses = காண்டாமிருகக்குடும்பம் / (மூக்குக்கொம்பன்கள்??)-அதிக பயன்பாடில்லை.
 • en:Artiodactyla = இரட்டைப்படைக் குளம்பிகள் /
 • en:Pigs = பன்றிக்குடும்பம் /
 • en:Camelidae = ஒட்டகக்குடும்பம் /
 • en:Deer = மான்குடும்பம் /
 • en:Bovids = ஆக்குடும்பம் / (ஆன்குடும்பம்??)
 • en:Rodentia = கொறிணிகள் /
 • en: squirrels = அணில் குடும்பம் /
 • en:Flying squirrels = பறக்கும் அணில் குடும்பம் /சிறகணில் குடும்பம்
 • en:Hares and Rabbits = முயல்குடும்பம் /

கீழ்காணும் ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்கள் உருவாக்கபடவேண்டும். அனைவரின் பங்களிப்பும் பெரிதும் வரவேற்க்கப்படுகிறது.

செல்வாவின் கருத்து[தொகு]

பேச்சு:ஓங்கில்லில் இருந்து எடுக்கப்பட்டது: "தற்கால" இலத்தீன் (modern Latin) சொல்லாகிய cetus என்பது திமிங்கிலம் என்று பொருள் படும். ஆங்கிலத்தில் cetacea என்பது "திமிங்கிலம் போன்ற" அல்லது "திமிங்கிலம் அனைய" என்னும் பொருள் உடையது. இதன் அடிப்படையில் உயிரினங்களின் பெயர்களில் -acea என முடியும் சொற்களுக்கு "-அனையி" என்னும் பின்னொட்டு சேர்ப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். இதே போல -dae என்று முடியும் சொற்களுக்கு வகையி என்று கூறலாம் என்று நினைக்கிறேன். எனவே இங்கே cetacea என்பதற்கு திமிங்கிலமனையி (= திமிங்கிலம் + அனை+இ) என்று எழுதியிருக்கின்றேன். --செல்வா 14:50, 6 ஜனவரி 2009 (UTC)

செல்வா மேற்கூறிய கருத்தை இங்கு பெயரிடலுக்கு பின்பற்றலாம்--கார்த்திக் 17:50, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
இப்படி ஒரு முறையுடன் செய்வது நல்லது. இன்னும் சில பின்னொட்டுகளையும் சேர்ந்தெண்ணி ஒரே முறைப்பாட்டில் செய்யலாம். அல்லது குடும்பம், துணைக்குடும்பம், கிளைக்குடும்பம், மேற்குடும்பம் (superfamily) முதலியவற்றுக்கு கு, துகு, கிகு, மேகு என்றும் தனியாக இணைக்கலாம். எடுத்துக்காட்டாக நாய்க்குடும்பம் என்பதை நாய்வகையி என்பதற்கு மாறாக நாய்.கு என்றும், ஊர்சிடீ என்பதை கரடிவகையி என்பதற்கு மாறாக கரடி.கு எனலாம். புலிபூனைவகையி என்பதற்கு மாறாக புலிபூனை.கு எனலாம். எது செய்தாலும் கூடிய மட்டிலும் ஒரே சீராக செய்வது நல்லது.--செல்வா 19:00, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
 • கரடி.கு (கரடிவகையி என்பதற்கு மாறாக) என்பது போல அமைத்தால் சிறப்பாக இருக்குமென்று கருதுகிறேன். இலத்தீன் முறையில் பெயரிடல் முறை ஏறத்தாழ 400 முன் தோன்றியது. அறிஞர்களுக்கு இடையே குழப்பங்களைத் தவிர்க்க இம்முறை அன்றும், இன்றும் குறைவாகப் பயனாகிறது. மேலும், வகைப்பாட்டியலில் பல மாற்றங்கள், முறைகள் வளர்ந்து வருகிறது. நமது இலக்கு அறிஞர்கள் அல்ல, மாணவர்கள்; சாதாரண மக்கள்.

அவர்கள் சுலபமாகப் புரிந்து கொள்ள மட்டுமே ஆவண செய்ய வேண்டும். எளிமையே வன்மை. எக்காலத்தையும் கடக்கும் குறள் போன்று என்பது என் கருத்து.த* உழவன் 07:41, 5 ஜனவரி 2010 (UTC)