வார்ப்புரு:Uw-3rr

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிறுத்தற் படவுரு

உங்கள் அண்மைய தொகுப்பு வரலாற்றின்படி, நீங்கள் ஒரு தொகுப்புப் போரில் தற்போது ஈடுபட்டு வருவதாகத் தெரிகின்றது. உங்கள் தொகுப்புகள் மீளமைக்கப்பட்டதும், உள்ளடக்கம் தொடர்பான பிணக்கைத் தீர்ப்பதற்காக, அருள்கூர்ந்து மற்றையவர்களின் தொகுப்புகளை மீளமைக்கவோ மாற்றவோ வேண்டாம். மீளமைப்பதற்குப் பதிலாக, அருள்கூர்ந்து கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடி, பங்களிப்பாளர்களுக்கிடையே ஓர் இணக்க முடிவுக்கு வந்து, கட்டுரையில் அதனைச் செயற்படுத்த உதவுங்கள். இக்கட்டத்தில் உரையாடுவதே சிறப்பான நடைமுறை ஆகும். தொகுப்புப் போரில் ஈடுபடுவதன்று. உரையாடல்கள் இக்கட்டான ஒரு நிலைக்கு இட்டுச் செல்லுமாயின், தொடர்புடைய ஓர் அறிவிப்புப்பலகையில் உதவிவேண்டி ஒரு வேண்டுகோள் விடுங்கள். சில பிணக்குகளில், தற்காலிகப் பக்கக் காப்பை ஏற்படுத்தும்படி, நீங்கள் வேண்டுகோள் விடுக்கலாம்.

ஒரு தொகுப்புப் போரில் ஈடுபடுவது, தொகுப்பதிலிருந்து தடைசெய்யப்படும் நிலைக்கு உங்களை இட்டுச்செல்லலாம்—சிறப்பாக, நீங்கள் மூன்று மீளமைத்தல்கள் விதியை மீறினால் இவ்வாறு நடக்க வாய்ப்புண்டு. மூன்று மீளமைத்தல்கள் விதியின்படி, 24 மணிநேரத்தினுள், ஒரே பக்கத்தில் பங்களிப்பாளர் ஒருவர் மூன்று மீளமைத்தல்களுக்கு மேல் செய்யக்கூடாது. வேறு பங்களிப்பாளரின் பங்களிப்பை முழுமையாகவோ பகுதியாகவோ, ஒவ்வொரு தடவையும் ஒரே உள்ளடக்கத்தையோ வேறு உள்ளடக்கத்தையோ இல்லாமற்செய்வது—மீளமைத்தலாகவே கருதப்படும். மூன்று மீளமைத்தல்கள் விதியை மீறினால், பொதுவாக நீங்கள் தடுக்கப்படலாம், எனினும், மூன்று மீளமைத்தல்கள் விதியை நீங்கள் மீறாவிடினும்—மீண்டும் மீண்டும் மீளமைக்க எத்தனிப்பதாக உங்கள் நடத்தையிலிருந்து தெரியவந்தால்—தொகுப்புப் போர் காரணமாகக் கூட நீங்கள் தடைசெய்யப்படலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Uw-3rr&oldid=2063384" இலிருந்து மீள்விக்கப்பட்டது