வார்ப்புரு:தொகுக்கப்பெற்றது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செட்டிநாடு அரண்மனை (11875909733)

அறிமுகம்[தொகு]

தமிழகத்தின் பாரம்பரிய கட்டிடக் கலையை உலகிற்கு பறைசாற்றும் ஊர் சர்வதேச கட்டடக்கலைக்கு முன்னோடியாக திகழும் செட்டிநாடு.

வரலாறு[தொகு]

காரைக்குடி, புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றி குறிப்பிட்ட மக்கள் குடியேறிய 96 ஊர்களும் சேர்ந்து செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது.சிறிய அரண்மனை 40அடி அகலம்,120அடி நீளத்திலும்,மிகப்பெரிய அரண்மனை 60அடி அகலம்,200அடி நீள இடத்தில் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது.இந்த மாளிகைகள் அலங்கார விளக்குகள்,தேக்குமரச் சாமான்கள்,பளிங்குகள்,கண்ணாடிகள்,கம்பளங்கள் மற்றும் படிகங்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது.ஆயிரம் சன்னல்கள் வைத்த வீடுகள் கூட இங்கு உண்டு.ஓர் அறை மட்டும் முழுவதும் கண்ணடிகளால் உருவாக்கப்பட்ட வீடுகளும் உண்டு. சுண்ணாம்புக்கலவை,கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து பின் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து, இக்கலவையைக் கொண்டு சுவர் எழுப்பியுள்ளனர்.

சிறப்புகள்[தொகு]

செட்டிநாடு புராதன அரண்மனைகள் யுனஸ்கோ பட்டியலில் இடம்பெற்றுள்ளன். தமிழ் மண்ணின் தேவலோகம் என்று அழைக்கப்படுகிறது.