வார்னர் புரோஸ். இயங்குபடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வார்னர் புரோஸ். இயங்குபடம்
வகைபிரிவு
நிறுவுகைமார்ச்சு 15, 1980; 43 ஆண்டுகள் முன்னர் (1980-03-15)[1]
தலைமையகம்பர்பாங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா 411வடக்கு ஹாலிவுட் வழி
முக்கிய நபர்கள்சாம் ரெஜிஸ்டர் (தலைவர், வார்னர் புரோஸ். இயங்குபடம் மற்றும் வார்னர் எண்முறை தொடர்)
தொழில்துறை
தாய் நிறுவனம்வார்னர் புரோஸ். குளோபல் கிட்ஸ், யங் மற்றும் கிளாசிக்ஸ்
(மூலம் இயக்கப்பட்டதுவார்னர் புரோஸ்.)

வார்னர் புரோஸ். இயங்குபடம் (ஆங்கில மொழி: Warner Bros. Animation)[2] என்பது அமெரிக்க நாட்டு இயங்குபட இசுடியோ ஆகும். இது வார்னர் புரோஸ். என்டர்டெயின்மென்ட்டின் ஒரு பகுதியாகவும், வார்னர் புரோஸ். டிஸ்கவரியின் துணை நிறுவனமும் ஆகும். இந்த இஸ்டுடியோ லூனி ட்யூன்சு மற்றும் மெர்ரி மெலடிசு போன்ற கதாபாத்திரங்களுடன் நெருக்கமாக தொடர்புடையது. இது 1933 முதல் 1963 வரையிலும், 1967 முதல் 1969 வரையிலும் லூனி ட்யூன்சு மற்றும் மெர்ரி மெலடீசு கார்ட்டூன் குறும்படங்களைத் தயாரித்த இசுடியோவான 'வார்னர் புரோஸ். கார்ட்டூன்களின்' வாரிசாக இந்த இசுடியோ உள்ளது.

வார்னர் தனது இயங்குபட பிரிவை லூனி ட்யூன்சு தொடர்பான படைப்புகளை உருவாக்க 1980 இல் மீண்டும் நிறுவினார், மேலும் டைம் வார்னருடன் (பின்னர் வார்னர் மீடியா என அழைக்கப்பட்டது) 1996 இல் இணைக்கப்பட்டது. இது மார்ச்சு 15, 1980 இல் வார்னர் பிரதர்ஸ் கார்ட்டூன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1957 முதல் 2001 வரை கான்னா-பார்பரா என்ற பெயரில் இயக்கியது.

சமீபத்திய ஆண்டுகளில் வார்னர் புரோஸ். இயங்குபடம், டிசி காமிக்ஸ், மெட்ரோ-கோல்ட்வின்-மேயர் கார்ட்டூன் இசுடியோ (டர்னர் என்டர்டெயின்மென்ட் கோ வழியாக) உட்பட வார்னர் பிரதர்ஸுக்குச் சொந்தமான பிற சொத்துக்களால் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி மற்றும் நேரடி காணொளி இயங்குபடங்களை தயாரிப்பதில் முதன்மையாக கவனம் செலுத்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]