உள்ளடக்கத்துக்குச் செல்

வார்தா வரோரா மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாய் வார்தா மின் நிலையம் (Sai Wardha Power Plant) இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநிலத்தின் சந்திரப்பூர் மாவட்டத்தில் வரோரா என்ற நகரத்தில் அமைந்துள்ளது. நிலக்கரியை எரிக்கும் போது கிடைக்கும் வெப்பத்தைக் கொண்டு இங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கே.எசு.கே. மின் திறன்வழங்கும் நிறுவனம் சாய் வார்தா மின் நிலையத்தை இயக்குகிறது.

மின்னுற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை மேற்கு நிலக்கரிபுலம் நிறுவனம் (WCL) வழங்குகிறது. இம்மின்னுற்பத்தி திட்டத்திற்கு பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரராக சீனாவைச் சேர்ந்த சிச்சுவான் எலக்ட்ரிக் டிசைன் கம்பெனி செயல்படுகிறது[1].

கொள்திறன்

[தொகு]

540 மெகாவாட் கொள்திறன் (4X135 மெ.வா) அளவுள்ள மின்னுற்பத்தி நிலையமாக சாய் வார்தா மின் நிலையம் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

அலகு எண். மின்னுற்பத்தித் திறன் துவக்கம் தற்போதைய நிலை
1 135 மெ.வா 2010 சூன் செயல்படுகிறது
2 135 மெ.வா 2010 அக்டோபர் செயல்படுகிறது
3 135 மெ.வா 2011 சனவரி செயல்படுகிறது
4 135 மெ.வா 2011 ஏப்ரல் செயல்படுகிறது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "KSK Energy Ventures Limited". Archived from the original on 28 ஏப்ரல் 2015. Retrieved 20 April 2015.