வார்க்வேர்த் கோட்டை
Appearance
வார்க்வேர்த் கோட்டை | |
---|---|
நொர்தம்பர்லாந்து | |
![]() | |
கோட்டைக்கோபுரத்துடன் கோட்டைச்சூழல் | |
ஆள்கூறுகள் | 55°20′41″N 1°36′38″W / 55.3447°N 1.6105°W |
இடத் தகவல் | |
உரிமையாளர் | ஆங்கில மரபுரிமை |
நிலைமை | இடிபாடுகள் |
வார்க்வேர்த் கோட்டை (Warkworth Castle) என்பது வட கிழக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள கோட்டை ஆகும். இது வட கிழக்கு இங்கிலாந்தில் உள்ள நொர்தம்பர் எனும் பிரதேசத்தில் அமைந்துள்ளது.[1] இக்கோட்டையானது இங்கிலாந்தின் வடகிழக்குக் கடற்கரையிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தொலைவில் கோகட் ஆற்றின் தடயப்பாதையில் (loop) அமைந்துள்ளது.
பன்னிரண்டாம் நூற்றாண்டின் இடைக்காலப் பகுதியில் இசுக்கொட்லாந்து மன்னனான ஹென்றிக்கு இக்கோட்டையைக் கட்டும் வேலை கொடுக்கப்பட்டது. எனினும் இங்கிலாந்தின் வடக்குப் பகுதிகளை ஆண்டுவந்த இங்கிலாந்திதின் இரண்டாம் ஹென்றியினாலேயே இக்கோட்டை கட்டப்பட்டது. தற்போது இக்கோட்டை முழுமையானதாக இல்லாமல் இடிபாடுகளுடனேயே காணப்படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Castle Curtain Walls with Gateway, Towers and Attached Buildings, Heritage Gateway, retrieved 19 அக்டோபர் 2011