வாரியங்காவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாரியங்காவல்
Variyankaval
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்4,125
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அ.கு.எண்621806
தொலைபேசிக் குறியீடு04331
வாகனப் பதிவுதநா-
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)
அருகாமை நகரம்செயங்கொண்டம்
பாலின விகிதம்1.000 /
மக்களவைசிதம்பரம்

வாரியங்காவல் (Variyankaval) கிராமம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டிமடம் தாலுக்காவில் அமைந்துள்ளது. இங்கு ஓர் அரசு ஆரம்பப் பள்ளியும் மேல்நிலைப் பள்ளியும் உள்ளன. இவற்றை தவிர ஒர் ஆரம்ப சுகாதார நிலையமும் ஒரு வங்கியும் இங்கு இயங்குகின்றன. விவசாயம் மற்றும் நெசவு கிராமத்தின் முக்கிய தொழில்களாகும். வாரியங்காவலின் அனைத்து திசைகளும் ஏரிகளால் சூழப்பட்டுள்ளது. நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட வீடுகளுடன் நான்கு பழமையான தெருக்கள், மேற்கு பகுதியில் நான்கு திட்டப்பட்ட புதிய தெருக்கள், கிழக்கு பகுதியில் இரண்டு புதிய நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள் என்பது வாரியங்காவல் கிராமத்தின் அமைப்பாகும். யுனெசுகோவின் பாரம்பரிய தளமாகக் கருதப்படும் சோழப் பேரரசின் தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரம் வாரியங்காவல் கிராமத்தின் கிழக்கே 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமம் சோழர் காலத்தைச் சேர்ந்த கிராமமென்றும் 1000 ஆண்டுகால பழமை மிக்கதென்றும் நம்பப்பட்டு வருகிறது. முதுமக்கள் தாழி என்று அழைக்கப்படும் புராதன புதைகலன்கள் இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் அகழ்வாய்வு செய்யப்படாமல் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வரியங்காவல் கிராமத்தின் மக்கள் தொகை மொத்தம் 4125 பேர்களாகும். இவர்களில் 2063 ஆண்களும் 2062 பெண்களும் இருந்தனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu". Archived from the original on 29 ஆகத்து 2009. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரியங்காவல்&oldid=2998452" இலிருந்து மீள்விக்கப்பட்டது