வாய்ப்பூட்டு (கால்நடை வளர்ப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாய்ப்பூட்டு என்பது பசுவின் பச்சிளங்கன்றுகள் வாயைத் திறக்காமல் இருக்க அணிவிக்கப்படும் ஒன்றாகும். பொதுவாக இது கயிற்றால் செய்யப்பட்டு இருக்கும். இது கன்றுகள் கண்டதைத் தின்பதைத் தவிர்க்கும் பொருட்டும் தாயிடமிருந்து பாலைக் குடிப்பதைத் தவிர்க்கும் பொருட்டும் அணிவிக்கப்படும். இளம் கன்றுகளின் கழுத்தில் கயிறு கொண்டு அவற்றைக் கட்டிப்போட இயலாதாகையால் வாய்ப்பூட்டு போட்டு அவற்றை சுதந்திரமாக விடுவர். கன்று சற்று வளர்ந்து அவற்றைக் கட்டிப்போடும் நிலை வந்ததும் வாய்ப்பூட்டின் தேவை அகன்று விடும்.