உள்ளடக்கத்துக்குச் செல்

வாமெனா

ஆள்கூறுகள்: 4°5′51″S 138°57′04″E / 4.09750°S 138.95111°E / -4.09750; 138.95111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாமெனா
Wamena
Kota Wamena
வாமெனா நகரச்சாலை
வாமெனா நகரச்சாலை
வாமெனா அமைவிடம்
Map
ஆள்கூறுகள்: 4°5′51″S 138°57′04″E / 4.09750°S 138.95111°E / -4.09750; 138.95111
நாடு
 இந்தோனேசியா
பகுதி மேற்கு நியூ கினி
மாநிலம்மேல்நில பப்புவா
பிராந்தியம்ஜெயவிஜயா
பரப்பளவு
 • மொத்தம்249,31 km2 (9,626 sq mi)
மக்கள்தொகை
 (2024)
 • மொத்தம்66,080
 • அடர்த்தி2.7/km2 (6.9/sq mi)
 [1][2]
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +9
அஞ்சல்(+62) 901

வாமெனா (இந்தோனேசியம்: Kota Wamena; ஆங்கிலம்: Wamena) என்பது இந்தோனேசியா, மேற்கு நியூ கினி, மேல்நில பப்புவா மாநிலம், ஜெயவிஜயா பிராந்தியத்தில் உள்ள ஒரு மாநகரமாகும். இந்த நகரம் ஜெயவிஜயா பிராந்தியத்தின் தலைநகரமாகவும் செயல்படுகிறது.

பாலியம் பள்ளத்தாக்கில் (Baliem Valley) அமைந்துள்ள இந்த நகரம் மேல்நில பப்புவா மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும்.

2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் தொகை 64,967 ஆக இருந்தது; 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 66,080-ஆக இருந்தது.

இந்த நகரம் மேல்நில பப்புவாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற கிராம மையமாக விளங்குகிறது. 300,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாலியம் பள்ளத்தாக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர்.[3][2] இந்த மக்கள் பல இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள்; அவற்றில் மிக முக்கியமானவை டானி, லானி மற்றும் யாலி இனக்குழுக்களாகும்.

வரலாறு

[தொகு]
வாமேனாவில் ஒரு சந்தை.

1938-ஆம் ஆண்டில், வாமெனா அமைந்துள்ள பாலியம் பள்ளத்தாக்கு; மற்றும் அதன் பெரிய அளவிலான வேளாண் மக்களின் வசிப்பிடங்கள்; ரிச்சர்ட் ஆர்ச்போல்ட் (Richard Archbold) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன.

1938 சூன் 21 அன்று, வான்வழி உளவு வானூர்தி வழியாக 'பாலியம் பள்ளத்தாக்கு' பற்றிய இரகசியங்கள் கண்டறியப்பட்டன. பாலியம் பள்ளத்தாக்கு, வெளி உலகத்திலிருந்து கிட்டத்தட்ட முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது நியூ கினியில் நடந்த போர்களில்கூட பாலியம் பள்ளத்தாக்கு பாதிக்கப்படவில்லை. படையெடுப்புகள் எதுவும் நடைபெறவில்லை.

அதன் பின்னர், 1956-ஆம் ஆண்டில் இடச்சுக்காரர்களால் வாமெனா நகரம் நிறுவப்பட்டது. மேற்கு நியூ கினியில் இடச்சுக்காரர்கள் இருந்தபோது நிறுவப்பட்ட கடைசி நகரங்களில் வாமெனா நகரமும் ஒன்றாகும்.[4] அப்போது இருந்து பாலியம் பள்ளத்தாக்கு, படிப்படியாக வெளியுலகச் சுற்றுலாவிற்குத் திறக்கப்பட்டது.

பொருளாதாரம்

[தொகு]

பப்புவாவின் பிற பகுதிகளை விட, வாமெனாவில் பலவகையான புதிய பழங்கள்; மற்றும் புதிய பச்சை காய்கறிகள் கிடைக்கின்றன. 2013 சூன் 6-ஆம் தேதி, நகர மையத்தில் ஒரு நவீனச் சந்தை கட்டப்பட்டது. பாரம்பரிய உழவர்கள் தங்களின் அறுவடைகளைச் சரியான விலைக்கு விற்கும் வகையில் இந்தச் சந்தை உருவாக்கப்பட்டது.[5]

வானூர்தி போக்குவரத்து

[தொகு]
வாமெனா வானூர்தி நிலையம்

வாமெனா நகரம் தனிமைப்படுத்தப்பட்ட ஓர் இடம் என்பதால், இப்பகுதிக்கான முக்கிய அணுகல் வானூர்திப் பயணமாகும். இந்த நகரமும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கும் ஒரே ஒரு வானூர்தி நிலையத்தால் சேவைப்படுகிறது. அத்துடன் இந்தோனேசிய தேசிய ஆயுதப் படைகளின் (Indonesian National Armed Forces) எர்குலிஸ் வானூர்திகளை நிறுத்தக்கூடிய ஒரே வானூர்தி நிலையமாகவும் வாமெனா வானூர்தி நிலையம் (Wamena Airport) சேவை செய்கிறது.

டிமோனிம் ஏர் (Dimonim Air), டிரிகானா ஏர் (Trigana Air), அவியாஸ்டார் மந்திரி (Aviastar Mandiri), சுசி வானூர்தி நிறுவனம் (Susi Air), மெர்பாத்தி வானூர்தி நிறுவனம் (Merpati), மற்றும் விங்ஸ் ஏர் ஆகியவை வாமெனா வானூர்தி நிலையத்திற்குச் சேவை செய்கின்றன.

திரான்ஸ்-பப்புவா நெடுஞ்சாலையின் (Trans-Papua Highway) சில பகுதிகள் வாமெனாவைக் கடந்து செல்கின்றன. இந்த நெடுஞ்சாலை பப்புவா நியூ கினி மாநிலங்களில் உள்ள மற்ற நகரங்களுடன் சாலை வழியாக இந்த நகரத்தை இணைக்கிறது.

காலநிலை

[தொகு]

வாமெனா நகரம், வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் (Af) கொண்டது; மிக உயரமான இடத்தில் இந்த நகரம் அமைந்து இருப்பதால் மத்திம அளவு மழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும்.

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kabupaten Jayawijaya Dalam Angka 2020". www.jayawijayakab.bps.go.id. Retrieved 11 January 2021.
  2. 2.0 2.1 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Kabupaten Jayawijaya Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.9501)
  3. Badan Pusat Statistik, Jakarta, 2021.
  4. Martin Gostelow, James Hardy (2002). This Way, Indonesia. Hunter Publishing. p.48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-8845-2096-1
  5. Bustami, Rizal (24 June 2013). "John Wempi Wetipo Resmikan Wamena Mall". #PapuaUS - Papua Untuk Semua. Retrieved 2023-03-28.
  6. "SYNOP/BUFR observations. Data by months". Meteomanz. Retrieved 21 March 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாமெனா&oldid=4237098" இலிருந்து மீள்விக்கப்பட்டது