வான் (சொல்விளக்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வான் என்னும் தமிழில் வானம் எனவும் வழங்கப்படும். வான் என்னும் சொல் பெயர்ச்சொல்லாகவும் உரிச்சொல்லாகவும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது அது மழையைக் குறிக்கிறது. [1]

உரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது இது பண்பை உணர்த்தும் பெயரடையாக [2] வருகிறது. வான் என்னும் சொல் உணர்த்தும் பண்புப் பொருள்களை எடுத்துக்காட்டுகளூடன் இங்குக் காணலாம்.

வான் - உரிச்சொல்[தொகு]

பொருள் மேற்கோள் (நூலின் பெயர் அடிக்குறிப்பாகத் தரப்பட்டுள்ளது)
உயர்வு வான்கலம் [3]
வான்கழல் [4]
தலைக்கு மேல் உள்ள வெளியிடம் வான்குரீஇக் கூடு [5] [6]
மழைமேகம் வான்கேழ் நிதியம் [7]
வான்கொள் தூவல் [8]
வெள்ளை நிறம் வான்கோல் இலங்கு வளை [9]
வான்சுதை வண்ணம் [10]
வானுலகம் [11] வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித் தலைப் பெருங் காடு முன்னிய பின்னே [12]
ஒன்றுமில்லாத வெற்றிடம் வான் தோய்வு அற்றே காமம் [13]

இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்து வானவன், வானவர், வானுலகம் முதனான சொற்களின் பொருளை உணர்ந்துகொள வேண்டும். தே < தேன் < தேவர் என்னும் சொல்லையும் இதனோடு ஒப்பிட்டு உணர்ந்துகொள்ள வேண்டும்.

பார்க்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1. வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
  தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று (திருக்குறள்)
 2. உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை,
  இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி,
  பெயரினும் வினையினும் மெய் தடுமாறி (தொல்காப்பியம் 2-297)
 3. பெரும்பாணாற்றுப்படை 477
 4. குறிஞ்சிப்பாட்டு 126
 5. தூக்கணாங்குருவிக் கூடு
 6. சிறுபஞ்சமூலம் 25
 7. சிறுபாணாற்றுப்படை 249
 8. அகநானூறு 133
 9. அகநானூறு 261
 10. திருக்குறள் 714
 11. இறந்தபின் வானுலகில் வாழ்கின்ற தந்தைக்கு மகன் அளிக்கும் சோறு
 12. புறநானூறு 250
 13. குறுந்தொகை 102
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்_(சொல்விளக்கம்)&oldid=1677826" இருந்து மீள்விக்கப்பட்டது