வான் லியூசென் வினை
வான் லியூசென் வினை | |
---|---|
பெயர் மூலம் | தான் வான் லியூசென் ஆல்பர்ட்டு எம். வான் லியூசென் |
வினையின் வகை | பதிலீட்டு வினை |
இனங்காட்டிகள் | |
கரிமவேதியியல் வலைவாசல் | லியூசென் வினை.shtm வான் லியூசென் வினை |
வான் லியூசென் வினை (Van Leusen reaction) என்பது ஒரு கீட்டோன், தொலுயீன்சல்போனைல்மெத்தில் ஐசோசயனைடுடன் வினைபுரிந்து ஒரு நைட்ரைலை உருவாக்குகின்ற வினையாகும். 1977 ஆம் ஆண்டு இவ்வினையைக் குறித்து முதன்முதலில் வான் லியூசெனும் அவருடன் இணைந்து பணியாற்றிய சகதொழிலாளர்களும் விவரித்தனர் [1]. வான் லியூசென் வினையில் கீட்டோன்களுக்குப் பதிலாக ஆல்டிகைடுகளைப் பயன்படுத்தினால் குறிப்பாக ஆக்சசோல்களும் இமைடசோல்களும் கிடைக்கின்றன.
வினைவழிமுறை
[தொகு]தொலுயீன்சல்போனைல் மெத்தில் ஐசோசயனைடின் புரோட்டான் நீக்கத்துடன் இவ்வினைவழி முறையின் தொடக்கம் அமைகிறது. இதனால் சல்போன் மற்றும் ஐசோசய்னைடு குழுக்கள் இரண்டும் எலக்ட்ரான் திரும்பப்பெறும் விளைவுக்கு உட்படுகின்றன. இதனைத் தொடர்ந்து கார்பனைல் குழுவின் மீதான தாக்குதல் பால்டுவின் விதிகளை பின்பற்றும் 5-அக-மூலைவிட்ட வளையமாதல் வினையால் நிகழ்ந்து 5 உறுப்பினர் வளையமாகிறது.
வான் லியூசென் ஆக்சசோல் தொகுப்பு வினை | |
---|---|
பெயர் மூலம் | தான் வான் லியூசென் ஆல்பர்ட்டு எம். வான் லியூசென் |
வினையின் வகை | வளையம் உருவாகும் வினை |
இனங்காட்டிகள் | |
கரிமவேதியியல் வலைவாசல் | லியூசென் ஆக்சசோல் தொகுப்பு.shtm வான் லியூசென் ஆக்சசோல் தொகுப்பு |
வினையின் தளப்பொருள் ஆல்டிகைடாக இருக்கும் நிகழ்வில் விடுபடும் குழு தொலுயீன்சல்போனைல் குழு உடனடியாக உருவாகி நீக்கமடைகிறது. ஆக்சசோல் மூலக்கூறு விளைபொருளாக உருவாகிறது.
வான் லியூசென் இமைடசோல் தொகுப்பு வினை | |
---|---|
பெயர் மூலம் | தான் வான் லியூசென் ஆல்பர்ட்டு எம். வான் லியூசென் |
வினையின் வகை | வளையம் உருவாகும் வினை |
இனங்காட்டிகள் | |
கரிமவேதியியல் வலைவாசல் | லியூசென் இமைடசோல் தொகுப்பு.shtm வான் லியூசென் இமைடசோல் தொகுப்பு |
ஒருவேளை ஆல்டிகைடு ஓர் அமீனுடன் ஒடுக்க வினைபுரிந்து உருவாகும் ஆல்டிமைன் தளப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டால் மேற்கண்ட அதேவினை நிகழ்ந்து இமைடசோல்கள் உருவாகின்றன [2]
தளப்பொருளாக கீட்டோன்கள் பயன்படுத்தப்பட்டால் நீக்கவினை நிகழ்வதில்லை. மாறாக, அமைப்பு மாற்றியனாகும் செயல்முறை நிகழ்ந்து ஓர் இடைநிலைப்பொருள் உருவாகிறது. இதனைத் தொடர்ந்து வளையத்திறப்பு செயல்முறையும் தொலியீன்சல்போனைல் நீக்கமும் நிகழ்ந்து என்-பார்மைலேற்ற ஆல்க்கீனிமைன் உருவாகிறது. பின்னர் ஒர் அமிலத்தன்மை ஆல்ககாலால் கரைப்பானாற்பகுப்புக்கு உட்படுத்தப்பட்டு நைட்ரைல் விளைபொருள் உருவாகிறது.
.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Van Leusen, Daan; Oldenziel, Otto; Van Leusen, Albert (1977). "Chemistry of sulfonylmethyl isocyanides. 13. A general one-step synthesis of nitriles from ketones using tosylmethyl isocyanide. Introduction of a one-carbon unit". J. Org. Chem. (American Chemical Society) 42 (19): 3114–3118. doi:10.1021/jo00439a002.
- ↑ Gracias, Vijaya; Gasiecki, Alan; Djuric, Stevan (2005). "Synthesis of Fused Bicyclic Imidazoles by Sequential Van Leusen/Ring-Closing Metathesis Reactions". Org. Lett. (American Chemical Society) 7 (15): 3183–3186. doi:10.1021/ol050852+.