வான் ரிக்டர் வினை
கரிம வேதியியலில் வான்-ரிக்டர் வினை (Von-Richter reaction) "வான்-ரிக்டர் மறுசீரமைப்பு வினை" (Von-Richter rearrangement) என்றும் அழைக்கப்படுகிறது. 1871 ஆம் ஆண்டு விக்டர் வான் ரிக்டர் என்ற செருமானிய வேதியியலாளர் இவ்வினையைக் கண்டுபிடித்தார் என்பதால் அன்றுமுதல் இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. அரோமாட்டிக் நைட்ரோ சேர்மங்களுடன் பொட்டாசியம் சயனைட் வினைபுரிந்து முன்னாள் நைட்ரோ குழுவின் அமைப்பு நிலையை கார்பாக்சிலேற்றம் செய்து ஆர்த்தோ அமைப்பு நிலையாகக் கொடுக்கிறது[1][2][3]
பொதுவான வினைத் திட்டம்[தொகு]
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வினையில் புரோமோ நைட்ரோ பென்சீன் புரோமோ பென்சாயிக் அமிலமாக மாற்றமடைகிறது

கருநாட்டப் பிரதியிடும் வினைக்கு இவ்வினை ஓர் எடுத்துக்காட்டாகும் [4].புரோமினுக்குப் பதிலாகக் குளோரின் பயன்படுத்தப்பட்டால் மிகக்குறைவான 20% விளைபொருளே உண்டாகிறது[5]
வினை வழிமுறை[தொகு]
கொடுக்கப்பட்டுள்ள வினைவழி முறையில் புரோமின் குளோரினால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது[5]

முதலில் நைட்ரோ தொகுதிக்கு ஆர்த்தோநிலையில் உள்ள கரிம அணுவை சயனைடு தாக்குகிறது. 1 இத்தாக்குதலுக்குப் பின்னரும் அரோமாட்டிக் சேர்மமாகவே மறுபடியும் தாக்கப்படுகிறது 2 அடுத்த படிநிலையில் எதிர்மின் சுமையுடைய ஆக்சிசன் அணுக்கள் அடுத்துள்ள கார்பன் அணுவைத் தாக்கி ஐந்து உறுப்பினர் வளையச் சேர்மத்தை உருவாக்குகிறது.3 இதனைத் தொடர்ந்து கார்கோனைலிக் தொகுதி உருவாக வழிகிடைக்கிறது. 4 அடுத்து, அடுத்த ஒரு ஐந்து உறுப்பு வளையம் உருவாகிறது. 5 ஒரு ஒடுக்க வினையைத் தொடர்ந்து இரண்டு நைட்ரசன் அணுக்களுக்கிடையில் இரட்டைப் பிணைப்பு உருவாகிறது. 6 வளையத்தைத் திறக்க அடிப்படை நைட்ரசன் வெட்டப்படுகிறது. 7 கடைசிப் படிநிலையில் சேர்மமானது புரோட்டானேற்றம் செய்யப்பட்டு 3 – ஆலசனோ பென்சாயிக் அமிலம் 8 உருவாக்கப்படுகிறது.
பயன்கள்[தொகு]
கரிமத் தொகுத்தல் வினைகளில் இவ்வினை சிறிதளவே பயன்படுகிறது.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ V. von Richter (1871). "Untersuchungen über die Constitution der Benzolderivate (p )". Ber. dtsch. chem. Ges. 4 (1): 459–468. doi:10.1002/cber.187100401154.
- ↑ V. von Richter (1871). "Untersuchungen über die Constitution der Benzolderivate". Ber. dtsch. chem. Ges. 4 (2): 553–555. doi:10.1002/cber.18710040208.
- ↑ J. F. Bunnett (1958). "Mechanism and reactivity in aromatic nucleophilic substitution reactions". Quarterly Reviews Chemical Society 12 (1): 1–16. doi:10.1039/QR9581200001.
- ↑ M. Smith, M.B. Smith, J. March: March's advanced organic chemistry: reactions, mechanisms, and structure, 6th edition, Wiley 2007, ISBN 978-0-471-72091-1.
- ↑ 5.0 5.1 5.2 வார்ப்புரு:Literatur
வெளி இணைப்புகள்[தொகு]
- Von Richter Case History பரணிடப்பட்டது 2011-06-04 at the வந்தவழி இயந்திரம்