வான் செரென்க்கின் குருகு
Von Schrenck's bittern | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | இக்சோபிரைக்கசு
|
இனம்: | I. eurhythmus
|
இருசொற் பெயரீடு | |
Ixobrychus eurhythmus சுவைன்கோ, 1873 |
வான் செரென்க்கின் குருகு (Von Schrenck's bittern) அல்லது செரென்க்கின் குருகு (இக்சோபிரைக்கசு யூரித்மசு) என்பது ஒரு சிறிய குருகு (போடோரினே துணைக் குடும்பத்தின் பறவை) ஆகும். இது 19ஆம் நூற்றாண்டின் உருசியா இயற்கை ஆர்வலரான லியோபோல்ட் வான் செரென்க் நினைவாகப் பெயரிடப்பட்டது.
விளக்கம்
[தொகு]ஆண் பறவையின் மேற்புறம் சீரான கசுகொட்டை நிறத்திலிருக்கும். மேலும் கீழேயும் இறக்கையின் மீதும் மறைவான இறகுகள் காணப்படும். பெண் மற்றும் இளம் பறவைகளின் உடல் முழுவதும் கசுகொட்டை நிறத்துடன் மேலே வெள்ளை புள்ளிகளுடனும் கீழே வெள்ளை கோடுகளுடன் காணப்படும். பறக்கும் போது, இது கருப்பு இறகுகள் மற்றும் வால் இறக்கையுடன் காணப்படும். இது 33 முதல் 38 செ.மீ. நீளமுள்ள சிறிய சிற்றினமாகும். இது குறுகிய கழுத்து, நீண்ட மஞ்சள் அலகு மற்றும் மஞ்சள் கால்களுடன் காணப்படும்.[2]
பரவல் மற்றும் வாழ்விடம்
[தொகு]இது சீனா மற்றும் சைபீரியாவில் மார்ச் முதல் சூலை வரையிலும், சப்பானில் மே முதல் ஆகத்து வரையிலும் இனப்பெருக்கம் செய்கிறது. இந்தோனேசியா, பிலிப்பீன்சு, சிங்கப்பூர், லாவோஸ், தென்கிழக்காசியாவின் பிற பகுதிகளுக்குக் குளிர்காலத்தில் காணப்படும். மேற்குப் பகுதியில் 1912-ல்[1] இத்தாலியில், ஐரோப்பா வரையுள்ள பகுதியில் இது அரிதாகக் காணப்பட்டது.
நடத்தை மற்றும் சூழலியல்
[தொகு]வான் செரென்க்கின் குருகு நாணல் படுக்கைகளில் இனப்பெருக்கம் செய்கிறது. அந்தி வேளையில் இரையைத் தேடுவதற்காக வெளிப்படும்.[3]
பாதுகாப்பு
[தொகு]வான் செரென்க்கின் குருகின் பெரிய வரம்பில் பரவலாக, வான் செரெக்கின் குருகு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்பு பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 BirdLife International (2016). "Ixobrychus eurhythmus". IUCN Red List of Threatened Species 2016: e.T22697317A93607859. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22697317A93607859.en. https://www.iucnredlist.org/species/22697317/93607859. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ https://ebird.org/species/schbit1
- ↑ Martínez-Vilalta, A., A. Motis, G. M. Kirwan, and A. Bonan (2020). Schrenck's Bittern (Ixobrychus eurhythmus), version 1.0. In Birds of the World (J. del Hoyo, A. Elliott, J. Sargatal, D. A. Christie, and E. de Juana, Editors). Cornell Lab of Ornithology, Ithaca, NY, USA. https://doi.org/10.2173/bow.schbit1.01
வெளி இணைப்புகள்
[தொகு]- BirdLife International (2021). "Species factsheet: Ixobrychus eurhythmus".