வான் உச்சி நிழற்படக் கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Digital zenith camera system of University of Hannover for the observation of the plumb line and vertical deflection

வான் உச்சி நிழற்படக் கருவி (zenith camera) என்பது புவிப்பரப்பு வானியல் (geodetic astronomy) தொலைநோக்கியாகும். பூமியின் ஈர்ப்புப்பகுதியிலுள்ளவற்றை நில அளவை செய்ய இவ்வகைத் தொலைநோக்கிகள் பயன்படுகின்றன. வான் உச்சி நிழற்படக் கருவிகள் எங்கும் எடுத்துச் செல்ல வல்லதாகவும், வானியல் அச்சுத்தூரங்களில் (astronomical coordinates) தொலைநோக்கியை அமைக்கும் வகையில் குண்டுநூல் (plumb line) அமைப்புடனும், தொலைநோக்கியை செங்குத்து விலக்கம் (vertical deflection) அடையச் செய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

கருவி[தொகு]

வான் உச்சி நிழற்படக் கருவியானது 10 முதல் 20 செ.மீ விட்டமுள்ள ஒளியியல் வில்லையையும் எண்ணிம பிம்ப உணர்கருவியையும் (digital image sensor) அதாவது மின்னூட்ட பிணைப்புச் சாதனத்தையும் (Charge-coupled device) இணைக்கிறது. இவை வான் உச்சி பகுதியிலுள்ள நட்சத்திரங்களைக் காண உதவுகிறது. மின்னணு மட்டமாக்கும் கருவி (Electronic levels) தொலைநோக்கியை வான் உச்சியை நோக்கி அமைக்க உதவுகிறது.

தரவுச் செயலாக்கம் (Data processing)[தொகு]

மின்னூட்ட பிணைப்புச் சாதனத்தையும் பயன்படுத்தபட்ட வில்லையையும் பொறுத்து ஒரு வான் உச்சி நிழற்படக் கருவியானது 10 முதல் 100 நட்சத்திரங்களை படமெடுக்கப் பயன்படுகிறது. நட்சத்திரங்களின் அட்டவணைகளான Tycho-2 அல்லது UCAC-3 ஆகியவை நட்சத்திரங்களை இடங்காண உதவுகிறது. வான் உச்சி புள்ளியானது நட்சத்திரங்களை அடையாளங் காண உதவுகிறது.

துல்லிய அளவீடு மற்றும் பயன்கள்[தொகு]

பூமியின் ஈர்ப்புப்பகுதியிலுள்ளவற்றை நில அளவை செய்ய வான் உச்சி நிழற்படக் கருவிகள் பயன்படுகின்றன. வானியல் அச்சுத்தூரங்களில் 0.1 விகலை (seconds of arc) அளவுக்கு துல்லியமாக அளக்க இவை உதவுகிறது.

மேலும் படிக்க[தொகு]

மேலும் பார்க்க[தொகு]