வான் ஆறு
வான் ஆறு (Vaan River) மத்திய இந்தியாவில் ஓடும் ஓர் ஆறு ஆகும். இது தப்தி ஆற்றின் முக்கிய துணை ஆறான பூர்ணா ஆற்றின் துணை ஆறாகும். இது வான் அல்லது வன் என்றும் உச்சரிக்கப்படுகிறது. இது வான்கங்கா என்றும் அழைக்கப்படுகிறது.[1][2]
விளக்கம்
[தொகு]வான் ஆறு மகாராட்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் உள்ள கிழக்கு சத்புரா மலைத்தொடரின் கவில்கர் மலைகளில் உருவாகி, தெற்கு நோக்கிப் பாய்ந்து, அமராவதி, அகோலா மற்றும் புல்தானா பிராந்தியத்தில் வடிநிலத்தினைக்கொண்டு, மகாராட்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள பூர்ணா ஆற்றில் கலக்கிறது. இந்த நீர்நிலைகள் பெரும்பாலும் மகாராட்டிரா மாநிலத்தின் இந்த மூன்று மாவட்டங்களில் உள்ளன.
வான் ஆற்றின் மீது அகோலாவில் உள்ள வாரியில் வான் அணை உள்ளது. பின்வரும் கிராமங்களான வாரி பைரோகட், வார்கேட், சகோடா, தனாபூர், வாட்கான் பிரா அட்கான், கோலாட், காடேட், காகன்வாடா பக், காகன்வடா கே, வான்கெட், படுர்தா ஆகியன வான் ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.[3]
மகாராட்டிரா மாநில நெடுஞ்சாலைகளான ம. மா. நெ. சா. 194 வான்கெட் கிராமத்தில் ஆற்றைக் கடக்கிறது. மா. நெ. 195 காகன்வாடா பி. கே. விற்கும் காகன்வாடா கே கிராமத்திற்கும் இடையில் உள்ளது.
இடங்கள்
[தொகு]வான் ஆற்றின் பெயரால் பல இடங்கள் பெயரிடப்பட்டுள்ளன. அவைகளில் சில:
- வான் வனவிலங்கு சரணாலயம்-அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வனவிலங்குச் சரணாலயம், மேல்காட் புலிகள் காப்பகத்தின் விரிவாக்கமாகும் இது.
- தெற்கு மத்திய ரயில்வேயின் அகோலா-கண்ட்வா பாதையில் உள்ள வான் சாலை தொடருந்து நிலையம் (நிலையக் குறியீடு WND).
- அகோலாவில் வாரி என்ற இடத்தில் உள்ள வான் அணை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.holidaylandmark.com/blog/rivers-in-maharashtra-vaan-river/
- ↑ https://www.betterworldbooks.com/product/detail/tributaries-of-the-tapti-river-purna-river-vaan-river-panzara-river-gomai-river-girna-river-9781158667925?srsltid=AfmBOooHRScBuCcBF1KqppSObh6qT0n0dSrqPrGjC5IKrxKHXTs81tA1
- ↑ http://www.holidaylandmark.com/index.php?option=com_k2&view=item&id=6181:vaan-river&Itemid=118