மும்பை புறநகர் ரயில்வே வலையமைப்பின் மத்திய பாதையில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் வான்கனி தொடருந்து நிலையம் (Vangani railway station) ஆகும்.[1] இந்தத் தொடருந்து நிலையம்மகாராட்டிராவின்தானே மாவட்டத்தில் வான்கனி நகரில் அமைந்துள்ளது. இது மகாராட்டிர மாநிலத்தில் உள்ள முக்கியமான தொடருந்து நிலையமாகும். இந்த நிலையத்தின் குறியீடு VGI ஆகும்.[2] இந்நிலையம் மும்பையில் உள்ள தாதர் நிலையத்திலிருந்து 49 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அண்மையில் இந்த நிலைய இருப்புப்பாதையில் தொடருந்து வந்த வேளையில் சிறுவன் ஒருவன் தவறி விழுந்தான். இதனைக் கண்ட ரயில்வே தொழிலாளர் ஒருவர் விரைந்து வந்து சிறுவனைக் காப்பாற்றினார். இந்தச் செயலால் தற்பொழுது வான்கனி தொடருந்து நிலையம் பிரபலமாகியுள்ளது.[3]