உள்ளடக்கத்துக்குச் செல்

வானொலி கலாச்சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானொலி கலாச்சாரம்
Radio Culture
Typeவானொலி அலைவரிசை
Countryஉக்ரைன்
Availabilityபன்னாட்டு
Ownerசுசுபிலின்
Key people
திமித்ரோ கோர்கின் (பொதுத் தயாரிப்பு)
Launch date
சனவரி 1, 2001; 25 ஆண்டுகள் முன்னர் (2001-01-01)
Official website
ukr.radio

வானொலி கலாச்சாரம் (Radio Culture; உக்குரைனியம்: Радіо Культура, romanized: Radio Kultura) என்பது யுஆர்-3 என்றும் அழைக்கப்படுவது உக்ரைனின் சுசுபில்னேயின் மூன்றாவது வானொலி அலைவரிசையாகும். இந்த நிலையம் கலாச்சாரம், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. நாடகம், இலக்கியம், பாரம்பரிய இசை, கல்வி, அறிவியல், வரலாறு, காட்சி கலைகள், கட்டடக்கலை, மரபுகள் தொடர்பான நிகழ்ச்சிகளையும் வழங்குகிறது.

வரலாறு

[தொகு]
2017 முதல் 2022 வரை இலட்சினை

வானொலி கலாச்சாரம் 1 சனவரி 2001 அன்று ஒலிபரப்பத் தொடங்கியது. இதன் ஒலிப்பரப்பில் செய்தி, நடப்பு விவகாரங்கள், அறிவியல், கலாச்சாரம், கலை மற்றும் கல்வி நிரலாக்கங்கள் உள்ளன. இது மிக அதிக அளவிலான நேயர்களக் இலக்காகக் கொண்டுள்ளது.[1] தினசரி அடிப்படையில், இந்த நிலையம் வானொலி உக்ரைனின் தொகுப்புகளிலிருந்து காப்பகங்களையும், வானொலி நிலைய குழுவால் தயாரிக்கப்படும் வானொலி நாடகங்களையும் ஒளிபரப்புகிறது. இது ஒரு பரந்த இசைத் தொகுப்பினையும் கொண்டுள்ளது. மத இசை, "நித்திய கிளாசிக்", சிம்போனிக் இசை மற்றும் நாட்டுப்புற பாடல்கள் என்பன இவற்றில் சில.[2]

வானொலி உக்ரைன், வானொலி கலாச்சாரம் மூலம், ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் யூரோரேடியொ பரிமாற்ற திட்டத்தில் மிகவும் ஈடுபாடுடன் பங்கேற்கும் ஓர் நிலையமாகும்.[3] இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, 2019ஆம் ஆண்டில், உக்ரேனிய ரேடியோ சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா உட்பட வானொலி உக்ரைனின் ஒலிப்பதிவுகள் உலகெங்கிலும் உள்ள பொது வானொலி நிலையங்கள் மூலம் 300க்கும் மேற்பட்ட முறை இசைக்கப்பட்டன.[4]

2017 முதல், வானொலி கலாச்சாரம் உக்ரைனில் வானொலி நாடகங்களின் கருத்தை புதுப்பித்தது. 2018ஆம் ஆண்டில், இது பிரித்தானிய குழு மற்றும் மிஸ்டெட்ஸ்கி அர்செனலுடன் "யுஏ/யுகே வானொலி நாடகப்" போட்டியை நடத்தியது.[5]

புதிய சுசுபில்னே குடையை உருவாக்கியதன் மூலம், 2017ஆம் ஆண்டில், வானொலி கலாச்சாரம் 21 புதிய நிகழ்ச்சிகளை ஒலிப்பரப்பினன.[6] தற்போதைய இலட்சினை மே 2022இல் செயல்படுத்தப்பட்டது, இதன் முன்னோடியாக ஊதா நிறம் அரை வட்டத்தில் உள்ளவாறு அமைந்தது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "За рік на каналах «Українському радіо» відбулося переформатування та укрупнення програм. ІНФОГРАФІКА". stv.detector.media. Archived from the original on 15 August 2018. Retrieved 2018-08-15.
  2. ↑ "Третій канал "Культура" | Українське радіо". ukr.radio. Archived from the original on 5 November 2021. Retrieved 2019-11-28.
  3. ↑ "Гендиректор ЄМС Ноель Курран запевнив наглядову раду та правління Суспільного у подальшій підтримці". stv.detector.media. Archived from the original on 25 September 2019. Retrieved 2019-11-28.
  4. ↑ "Дмитро Хоркін: В Україні немає жодної свідомої людини, яка б не знала про «Українське радіо»". stv.detector.media. Archived from the original on 17 November 2019. Retrieved 2019-11-28.
  5. ↑ "Радіодрама UA/UK | British Council Україна". www.britishcouncil.org.ua (in உக்ரைனியன்). Archived from the original on 18 July 2018. Retrieved 2018-08-15.
  6. ↑ "Дмитро Хоркін: «До перетворення на Суспільне в "Українського радіо" була абсолютно бездарна структура»". stv.detector.media. Archived from the original on 2 July 2018. Retrieved 2018-08-15.
  7. ↑ "Суспільне Мовлення оновлює дизайн-систему брендів". Суспільне мовлення. Retrieved 2022-05-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானொலி_கலாச்சாரம்&oldid=4507838" இலிருந்து மீள்விக்கப்பட்டது