வானூர்திகளின் முதலாவது வான்வழிப் பயண நடுவிட மோதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானூர்திகள் நடுவானில் மோதிய முதலாவது விபத்து
First mid-air collision of airliners
விபத்து சுருக்கம்
நாள்7 ஏப்ரல் 1922
சுருக்கம்மூடுபனி வான்பரப்பில் மோதல்
இடம்பிக்கார்டி, பிரான்சு
49°38′00″N 01°56′49″E / 49.63333°N 1.94694°E / 49.63333; 1.94694ஆள்கூறுகள்: 49°38′00″N 01°56′49″E / 49.63333°N 1.94694°E / 49.63333; 1.94694
மொத்த உயிரிழப்புகள்7 (அனைவரும்)
மொத்த தப்பியவர்கள்0
முதல் வானூர்தி

பார்மேன் எஃப்-60
வகைபார்மேன் எஃப்.60
பெயர்கோலியாத்
இயக்கம்கிராண்ட்சு எக்ஸ்பிரசு ஏரியன்சு
வானூர்தி பதிவுF-GEAD
பறப்பு புறப்பாடுலெ போர்கே, பாரிசு
சேருமிடம்குரோய்டன்
பயணிகள்3
ஊழியர்2
உயிரிழப்புகள்5
தப்பியோர்0
இரண்டாவது வானூர்தி

டெ ஆவிலாண்ட் டிஎச்-18ஏ
வகைடி ஆவிலாண்ட் டிஎச்18ஏ
இயக்கம்டைம்லர் ஏர்வே
வானூர்தி பதிவுG-EAWO
பறப்பு புறப்பாடுகுரோய்டன்
சேருமிடம்லெ போர்கே, பாரிசு
பயணிகள்0
ஊழியர்2
உயிரிழப்புகள்2
தப்பியோர்0

1922 ஏப்ரல் 7ஆம் நாளன்று பார்மேன் எஃப்.60 வகை வானூர்தியும் டி ஹாவிலாண்ட் டிஎச்.18ஏ ரக வானூர்தியும்[1] மோசமான வானிலை காரணமாக (கடுமையான பனிமூட்டம் 1,பலத்த காற்று 2,) (மூலங்கள் வேறுபடுகிறது) நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் வானூர்தியின் ஊழியர்களோடு 7 பேர்கள் அதாவது அனைவருமே பலியானார்கள். இந்த விபத்து பிரான்சிலிருந்து வடக்கில் 70[2] மைல்கள் தொலைவில், பிக்கார்டி புனித அந்தோணி சாலை அருகில் நடந்ததாக அறியபடுகிறது.[3]

குறுந்தகவல்[தொகு]

இந்த பயணத்தின்போது, அமெரிக்கவை சேர்ந்த புதுமணத் தம்பதிகளும்,பிரான்சுதேசிய ஒரு குடிமகனும் பயணித்துள்ளனர் துரதஷ்டவசமாக மூவரும் பலியானதோடு, 2 வானூர்தி உழியர்களும் இறந்து போயினர். விபத்தின்போது ஒரு இளம் விமானி, உயிரோடு காணப்பட்டு பிறகு இறந்ததாக அறியப்படுகிறது.[4]

பின்னணி[தொகு]

ஆரம்பத்தில் இராணுவ தேவைக்காக வானூர்திகளும், விமானிகளும் உருவாக்கப்பட்டது. உலக யுத்தத்தை தொடர்ந்து, மற்ற நாடுகளைபோலவே பிரான்சும், மற்றும் பிரிட்டனும் உள்நாட்டு நோக்கங்களுக்காக, இராணுவ வானூர்திகளை வணிக வானூர்திகளாக வடிவமைத்து பல்நோக்கு தேவைக்காக வானூர்தி தொழில் நிறுவதில் கவனம் செலுத்தியதாக தெரிகிறது, பிரான்சு நிறுவனம் ஒரு அதிவிரைவு வான்வழி வானூர்தியை (ஃபார்மன் கோலியாத் பதிவு, F-GEAD) லெ பௌர்கெட்லிருந்து கிரொய்டன் வரை (Le Bourget to Croydon), தினசரி சேவையாக இயக்கியதாக அறியப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. வானூர்தி முதன்முறைகள்:336 கேள்வி பதில் வலைநூல்|பக்கம் 22/125
  2. "Jet Aviator 7/ முதற்பேராவில்/ஜூலை 16, 2008 அன்று". 2016-04-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-01 அன்று பார்க்கப்பட்டது.
  3. விமான போக்குவரத்து-பாதுகாப்பு-வலை-தகவல்-ஆவணம்.? முகவரி
  4. "Posted on July 16, 2008 by Jet Aviator 7/ In the second Para". ஏப்ரல் 22, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. அக்டோபர் 1, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. http://query.nytimes.com/gst/abstract.html?res=9406E7D61639EF3ABC4053DFB2668389639EDE- April 08, 1922, , Section , Page 1 (NYT)