வானிலை முன்னறிவிப்பின் முக்கியத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பயிர் உற்பத்தியைப் பாதிக்கும் காரணிகளில் வானிலை 50% வரை மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது.மழை பற்றிய வானிலை முன்னறிவிப்பு,ஒரு பகுதியின் பயிர் உற்பத்தியை நிர்ணயித்து நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது.

ஒரு பகுதியில் அதிக அளவு மழை பெறும் போது வெள்ள நிவாரணப் பணிகளையும்,குறைந்த மழை பெறும்போது நீர் சேமிப்பு முறைகளையும் திட்டமிடலாம்.தக்க தருணத்தில் செய்யப்படும் சரியான அறிவிப்பால் நல்ல உற்பத்தி ஏற்படுகிறது. சாதகமற்ற வானிலையால் நேரடியாகவும்,மறைமுகமாகவும் ஏற்படும் இழப்புகளை வானிலை முன்னறிவிப்பால் தடுக்கலாம். வானிலை மாற்றங்களால் ஏற்படும் பூச்சி,நோய் தாக்குதல்களைத் தவிர்க்கலாம்.நீர் பயன்பாடு பற்றித் திட்டமிடலாம்.

உசாத்துணை[தொகு]

1.வேளாண்செயல்முறைகள் கருத்தியல்,மேல்நிலை முதலாம் ஆண்டு -தமிழ் நாட்டு பாடநூல் கழகம்.