வானியற்பியல் மற்றும் விண்வெளி அறிவியல் மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானியற்பியல் மற்றும் விண்வெளி அறிவியல் மையம் (Center for Astrophysics and Space Sciences) என்பது 1979 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கலிபோர்னியா, சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சிப் பிரிவாகும். இது இயற்பியல், வேதியியல் , மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைக்கிறது. மத்திய அரசின் நிதியுதவி விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு உரிய மத்திய மேலாண்மை கட்டமைப்பை வழங்குகிறது. [1] [2]

சிறப்பு[தொகு]

  • உயர் ஆற்றல் வானியற்பியல்
  • ஒளியியல் மற்றும் புற ஊதா வானியல்
  • அகச்சிவப்பு வானியல்
  • வானொலி வானியல்
  • கோட்பாட்டு வானியற்பியல்
  • அண்டவியல்
  • சூரிய இயற்பியல்
  • விண்வெளி பிளாசுமா இயற்பியல்
  • குறுக்கீட்டுமானம்
  • வானியல் கருவி [3]

கடந்த திட்டங்கள்[தொகு]

வானியற்பியல் மற்றும் விண்வெளி அறிவியல் மையம் பல குறிப்பிடத்தக்க திட்டங்களை ஆதரித்துள்ளது. அவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

  • அப்பிள் விண்வெளி தொலைநோக்கியில் மங்கலான பொருள் நிறமாலைவரைவி
  • அப்பல்லோ பணிகள் 15 மற்றும் 16 இல் காமா-கதிர் நிறமாலைவரைவிகள்
  • உயர் ஆற்றல் வானியற்பியல் குழு [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Center for Astrophysics and Space Sciences Records". oac.cdlib.org. பார்க்கப்பட்ட நாள் 2023-01-02.
  2. "1991BAAS...23..104P Page 104". adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-01-02.
  3. "Main Page - CASS". cass.ucsd.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-02.