வானம்பாடிகள் இசை போட்டி நிகழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வானம்பாடிகள் இசை போட்டி நிகழ்ச்சி என்பது பிரான்ஸிலே நடைபெறும் ஒரு தமிழ் பாடல் போட்டி நிகழ்ச்சியாகும். இதில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் பிள்ளைகள் கலந்துகொண்டு, போட்டியிட்டு வருகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டி, 2011 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. புலம்பெயர் நாடுகளில், பிறந்துவளரும் குழந்தைகள், தமிழ்மொழியோடு சேர்த்து, தமிழ் இசையிலும் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காகவே இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. பல்வேறு அகவைப் பிரிவுகளில் நடைபெறும் இந்தப் போட்டியில் பலநூறுபேர் கலந்துகொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்திவருகிறார்கள். தெரிவுச் சுற்று, கலையகச் சுற்று, இறுதிப் போட்டி என பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன.

இறுதிப்போட்டியானது, பிரான்ஸிலே பொதுமக்கள் மத்தியிலே அரங்க நிகழ்வாக நடைபெறுகிறது. இதில் தென்னிந்திய சினிமாத்துறையில் இருக்கும் பிரபல இசையமைப்பாளர்கள், பாடகர்கள் ஆகியோர் நடுவர்களாக கலந்துகொள்கிறார்கள். போட்டியிலே வெற்றிபெறுபவர்களுக்கு சான்றிதழ்களும் பணப்பரிசில்களும் வழங்கப்படுகின்றன. அத்துடன் தென்னிந்திய சினிமாத்துறைக்குள் நுழைவதற்கான ஒரு திறவுகோலாகவும் இந்தப் போட்டி அமைகிறது.