உள்ளடக்கத்துக்குச் செல்

வானப்பட்டரை மாரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானப்பட்டரை மாரியம்மன் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை மாணிக்க விநாயகரின் தெப்பக்குளத்தின் கரையில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயிலாகும். [1] இந்தக் கோயிலின் அருகே சப்பாணி கருப்பசாமி எனும் நாட்டார் தெய்வத்திற்கும் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூலவர் பஞ்சமுக விநாயகர். கருவறை முன்மண்டபத்தில் மாரியம்மன் சிலையும், வலது புறத்தில் பெரிய விநாயகர் சிலை மற்றும் ஆவுடையார் இல்லாத லிங்க பாணம் அதற்கு முன்பு நந்தி சிலையும் காணப்படுகிறது. கருவறை முன் மண்டபத்தின் இடது புறத்தில் மற்றொரு மாரியம்மன் சிலை காணப்படுகிறது.

பஞ்சமுக விநாயகர், மாரியம்மன் மற்றும் சப்பாணி கருப்பசாமிக்கு தனி உற்சவர் சிலைகள் வடிக்கப்பட்டு உள்ளன. கோயிலின் மண்டபத்தில் இறை வாகனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. கோயிலின் சுவர் முழுவதும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய இறைச் சித்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. விஷ்ணு துர்க்கை, விநாயகர், பஞ்சமுக விநாயகர், ஆதிலட்சுமி முதலான அஷ்ட லட்சுமிகள், கையில் முருகனை ஏந்தியபடி அம்பிகை, சிவபெருமானின் லிங்க ரூபம் போன்ற ஓவியங்கள் உள்ளன.

ஆதாரங்கள்

[தொகு]
  1. வானப்பட்டரை மாரியம்மன் கோயிலில் அக்கி நட்சத்திரப் பூர்த்தி விழா 25 மே 2015 தினமலர்

வெளி இணைப்புகள்

[தொகு]