வாந்தாரா வனவிலங்குகள் பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம்
வாந்தாரா வனவிலங்குகள் பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் | |
---|---|
![]() வந்தாரா மையத்தில் முகேசு அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி | |
![]() | |
22°21′55″N 69°52′25″E / 22.3652684°N 69.8736128°E | |
திறக்கப்பட்ட தேதி | 4 மார்ச் 2025 |
அமைவிடம் | வாந்தாரா, ஜாம்நகர் மாவட்டம், குஜராத், இந்தியா |
விலங்குகளின் எண்ணிக்கை | 2000+ விலங்குகள்[1] |
உயிரினங்களின் எண்ணிக்கை | 43 |
வாந்தாரா வனவிலங்குகள் பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் (Vantara wildlife conservation, rescue and rehabilitation), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள வாந்தாரா எனும் பகுதியில் 3,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்த வனவிலங்குகள் பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஆகும்.[2] இம்மையத்தில் 43 வகையான இனத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்படுகிறது. இது தனியார் துறை மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
முகேசு அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இயக்குநராக உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை[3][4] நிர்வகிக்கும் இம்மையத்தை 4 மார்ச் 2025 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்[5][6]
வனவிலங்குகள் பாதுகாப்பு
[தொகு]வாந்தாரா மையம் வனவிலங்குகளை பாதுகாப்பது, மீட்பது, பராமரிப்பது மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், காண்டாமிருகங்கள் மற்றும்முதலைகள் உள்ளிட்ட 2,000க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை பாதுகாக்கிறது. இம்மையம் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிற விலங்குகள், ஊர்வன மற்றும் பறவைகளை மீட்டுள்ளதாக கூறுப்படுகிறது.[7] ஜாம்நகர் மாவட்டம் வெப்பமான, வறண்ட காலநிலையில் அமைந்துள்ளது மற்றும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம்[8] இம்மையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் இம்மையத்தில் உள்ள வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.[9]
மேலாண்மை
[தொகு]வந்தாரா மையம், முகேசு அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் வழிகாட்டுதலின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இம்மையத்தில் வனவிலங்குகளுக்கு தேவையான தீவிர சிகிச்சை பிரிவு, எம்.ஆர்.ஐ,, சி.டி ஸ்கேன், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் மற்றும் எண்டோஸ்கோபி அலகுகள் உள்ளிட்ட நவீன கால்நடை தொழில்நுட்பத்துடன் நிறுவப்பட்டுள்ள்து.[10]
குறிப்பிடத்தக்க சாதனைகள்
[தொகு]இந்திய விலங்கு நல வாரியத்திடமிருந்து நிறுவனப் பிரிவில் பிராணி மித்ரா தேசிய விருதை வாந்தாரா மையம் பெற்றுள்ளது. விலங்கு நலத் துறையில் பங்களிப்புகளை அங்கீகரிக்க இந்திய அரசால் இந்த விருது வழங்கப்படுகிறது.[11][12]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2,000+ Animals Across 43 Species at Reliance Foundation's Vantara Rescue and Rehabilitation Centre in Jamnagar". News18 (in ஆங்கிலம்). 2024-02-26. Archived from the original on 2024-02-29. Retrieved 2024-02-29.
- ↑ "Anant Ambani's 'Vantara' all set to welcome tigers, lions from Argentina". The Economic Times (in ஆங்கிலம்). 2024-04-10. Archived from the original on 2024-04-13. Retrieved 2024-12-24.
- ↑ "All about Vantara, the 3000-acre animal shelter launched by Anant Ambani in Jamnagar". The Times of India இம் மூலத்தில் இருந்து 2024-02-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240229100255/https://timesofindia.indiatimes.com/travel/travel-news/all-about-vantara-the-3000-acre-animal-shelter-launched-by-anant-ambani-in-jamnagar/articleshow/108098838.cms.
- ↑ "Mukesh Ambani's Son, Anant Ambani, launches 3,000-acre animal shelter 'Vantara' in Gujarat's Jamnagar: Meet the visionary behind this Reliance initiative". Financialexpress (in ஆங்கிலம்). 2024-02-28. Retrieved 2024-02-29.
- ↑ PM inaugurates Vantara, a unique wildlife conservation, rescue and rehabilitation initiative
- ↑ "PM Modi inaugurates Vantara in Jamnagar, feeds lion cubs, giraffes". ANI News (in ஆங்கிலம்). Retrieved 2025-03-04.
- ↑ "All You Need To Know About Vantara, The 3,000-Acre Animal Shelter Of Reliance". Indiatimes (in Indian English). 2024-02-27. Archived from the original on 2024-12-19. Retrieved 2024-12-19.
- ↑ Jamnagar Refinery
- ↑ "Anant Ambani Pledges His Unwavering Dedication To Vantara And Jamnagar". News18 (in ஆங்கிலம்).
- ↑ "Anant Ambani's Vantara has over 25,000 animals of 48 species". Firstpost (in அமெரிக்க ஆங்கிலம்). 2025-03-04. Retrieved 2025-03-05.
- ↑ Alex, Riya R (2025-02-27). "Anant Ambani’s Vantara receives prestigious Prani Mitra Award for animal welfare | Company Business News" (in en). mint இம் மூலத்தில் இருந்து 2025-03-04 அன்று. பரணிடப்பட்டது.. http://web.archive.org/web/20250304112655/https://www.livemint.com/companies/people/anant-ambanis-vantara-receives-prestigious-prani-mitra-award-for-animal-welfare-11740645378757.html.
- ↑ "Anant Ambani's Vantara wins prestigious national 'Prani Mitra' Award for excellence in animal welfare - CNBC TV18". CNBCTV18 (in ஆங்கிலம்). 2025-02-27. Retrieved 2025-03-05.