வாதிரியார்
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
|---|---|
| தமிழ்நாடு | |
| மொழி(கள்) | |
| தமிழ் | |
| சமயங்கள் | |
| இந்து |
வாதிரியான் அல்லது வாதிரியார் எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒரு பட்டியல் சமூகத்தினர் ஆவர். இவர்கள் தென்மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் கோவில்களில் முதல்மரியாதையையும் பெற்று வருகின்றனர்.[சான்று தேவை] இவர்கள் தாய் வழி கிளை வழி முறையை பின்பற்றும் சமூகங்கள் ஆகும். கிளை வழி திருமணம் முறையை இன்றும் பின்பற்றுவதால், இவர்கள் அக்காள் மகளை திருமணம் செய்வதில்லை.
வாதிரியார் சமூக மக்களின் பழக்கவழக்கங்கள் பிற சமூகங்களை காட்டிலும் வேறுபட்டது. ஏழு தாய்க் கிளைகளையும் 21 பட்டங்களையும் கொண்ட சமூகமாகும்.
;தாய் கிளைகள்
- பட்டன் கிளை
- சைவன் கிளை
- அருமை கொடி கிளை
- நம் காளி கிளை
- அருமைப் பணிந்தான் கிளை
- ஆவிடைப் பணிந்தான் கிளை
- கன்னிகை குறையான் கிளை
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், (எண் 72), இவர்கள் பட்டியல் பிரிவில் உள்ளனர்.
தொழில்
இச்சமூகத்தினர் பொதுவாக நெசவுத் தொழில், விவசாயம், பனையேறுதல் ஆகிய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.[1] இவர்கள் கப்பல் பாய்மர துணிகளை நெசவு செய்ய கூடியவர்கள் ஆவர். இவர்கள் பண்டைய காலத்தில் நெசவு தொழிலில் மிகவும் வல்லமை படைத்வர்கள் என கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலூ கூறுகிறார். இந்த வாதிரியார்கள் நெய்யும் துணி பெயர் கோழியர் என்று கீரேக்கத்தின் வரலாறு குறிப்பிடுகிறது.[சான்று தேவை] சிலர் அரசு மற்றும் தனியார் வேலைகளில் பணியாற்றுகின்றனர். ஒரு சிலர் வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனர்.
வாழும் பகுதிகள்
தமிழகத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், வள்ளியூர், சாயர்புரம், பரமன்குறிச்சி, ராயப்பபுரம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ குருசாமி, ed. (1999). தமிழர் பண்பாட்டு வரலாறு" ( தொகுதி இரண்டு). தமிழர் பண்பாடு சமூக ஆய்வு மன்றம். p. 75.